Home உலகம் தலிபான்களின் மூத்த தலைவர் சுட்டுக்கொலை!

தலிபான்களின் மூத்த தலைவர் சுட்டுக்கொலை!

467
0
SHARE
Ad

Tamil_Daily_News_62625849247பெஷாவர், பிப் 25 – ஜம்மு காஷ்மீரில் ஹர்கத்துல் முஜாகிதீன் தீவிரவாத  அமைப்புகளில் முக்கிய தலைவராக இருந்தவர் அஸ்மதுல்லா சாஹீன்  பிதானி. தலிபான் அமைப்பில் இணைந்த பின்னர், அதன் முக்கிய  கமாண்டர்களில் ஒருவராக உருவெடுத்தார்.

மேலும், பாகிஸ்தானில் அவர்  குடியேறினார். தலிபான்களின் முக்கிய அமைப்பான ‘சுரா’வின்  தலைவராக இருந்து வந்தார். இந்நிலையில், பெஷாவரில் உள்ள குலாம்  கான் பகுதியில் நேற்று பிதானி காரில் சென்று கொண்டிருந்தபோது,  பைக்கில் வந்த மர்ம நபர்கள் அவர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

இதில்  காரிலேயே பிதானி உயிரிழந்தார். மர்ம நபர்கள் பற்றி தகவல்  தெரிவிப்பவர்களுக்கு ரூ.1 கோடி பரிசு அளிக்கப்படும் என்று  அறிவிக்கப்பட்டிருந்தது.