Home கலை உலகம் அமலாபாலிடம் கால்ஷீட் கேட்கவில்லை-வெற்றிமாறன் மறுப்பு!

அமலாபாலிடம் கால்ஷீட் கேட்கவில்லை-வெற்றிமாறன் மறுப்பு!

492
0
SHARE
Ad

Vetrimaranசென்னை, பிப் 25 – தனுஷ் ஜோடியாக நடிக்க அமலா பாலிடம் கால்ஷீட் கேட்கவில்லை என்றார் வெற்றி மாறன். ஆடுகளம் பட இயக்குனர் வெற்றிமாறன் அடுத்து தனுஷ் நடிக்கும் புதிய படத்தை இயக்குகிறார்.

இப்படத்தில் கதாநாயகியாக நடிக்க அமலாபாலிடம் இயக்குனர் கால்ஷீட் கேட்டிருப்பதாக தகவல்கள் வெளியானது.

இதுகுறித்து வெற்றிமாறன் கூறும்போது, உதவி இயக்குனர்களிடம் கதை விவாதத்தில் இருந்தபோது கதைக்கு பொருத்தமான எந்த கதாநாயகி இருப்பார் என்று பேசியபோது அந்த பட்டியலில் அமலாபால் பேரும் இடம்பெற்றது.

#TamilSchoolmychoice

ஆனால் அவரை நான் இன்னும் கால்ஷீட் கேட்டு அணுகவில்லை. ஸ்கிரிப்ட் பற்றியும் அவரிடம் சொல்லவில்லை.
இதுபற்றி அமலாபாலிடம் கேட்டபோது கருத்து சொல்ல மறுத்துவிட்டார். மேலும் அமலா கூறும்போது, இப்போதைக்கு சமுத்திரகனியின் அடுத்த படத்துக்கு ஒப்பந்தமாகியுள்ளேன்.

சமுத்திரகனியின் நிமிர்ந்து நில் படத்தில் நடித்தபோது இருவருக்கும் நல்ல புரிதல் இருந்தது. இந்த உணர்வுதான் அவரது புதிய படத்திலும் நடிக்க என்னை சம்மதிக்க வைத்தது.

அவரே இப்படத்தை தயாரித்து இயக்குவதுடன் முக்கிய வேடத்திலும் நடிக்க உள்ளார் என்று எண்ணுகிறேன். இது கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதை. மைனா படத்தில் ஏற்ற கதாபதிரத்தைவிட இன்னும் சிரப்பானது என்றார் என்றார் அமலாபால்.