Home கலை உலகம் சுவாதியைப் பார்த்து கண்ணடிப்பேன்- நடிகர் சசிகுமார்!

சுவாதியைப் பார்த்து கண்ணடிப்பேன்- நடிகர் சசிகுமார்!

607
0
SHARE
Ad

24-1393234338-sasikumar-swathi5-600சென்னை, பிப் 25 – சுப்ரமணியபுரம் படத்தில் வெட்கப்படவே தெரியாத நடிகை சுவாதியைப் பார்த்து கண்ணடித்து வெட்கப்படவைப்பேன் என்று கூறினார் நடிகர் சசிகுமார்.

விஜய் தொலைக்காட்சியில் இந்த வாரம் ஞாயிறு இரவு காபி வித் டிடி நிகழ்ச்சியில் இயக்குநரும் நடிகருமான சசிகுமார் உடன் காபி குடித்தார் திவ்யதர்சினி.

சுப்ரமணியபுரம் தொடங்கி சமீபத்தில் ரிலீசான பிரம்மன் வரை இயக்கிய, நடித்த அனுபவங்களையும், படப்பிடிப்பில் நடந்த சுவாரஸ்ய சம்பவங்களையும் பகிர்ந்து கொண்டார் சசிகுமார்.
பள்ளியில் படிக்கும் போதே திரைப்பட இயக்குநராக வரவேண்டும் என்பதுதான் என் லட்சியம். சுவர் ஏறி குதித்து அப்போதே சினிமா பார்க்கப் போவேன்.24-1393234573-sasikumar-balu-mahendra4-600

#TamilSchoolmychoice

முதல்படமான சுப்ரமணியபுரம் இயக்கும் போது நடிகை சுவாதிக்கு வெட்கப்படத் தெரியாது. எதிரே நின்று கண்ணடித்து வெட்கப்பட வைப்பேன். என்னுடன் நடித்த கதாநாயகியை படங்களில் நடிக்கும் போது சைட் அடிப்பேன்.

சூட்டிங் ஸ்பாட்டில் அதிகமாக கோபம் வரும், மைக், செல்போன்களை அதிகம் உடைத்திருக்கிறேன்.  பாலுமகேந்திரா நடித்த தலைமுறைகள் படத்தை தயாரித்தது மறக்க முடியாத அனுபவம் என்று கூறும் போது நெகிழ்ச்சியடைந்தார் சசிகுமார்.