Home உலகம் சிங்கப்பூர் சாலையில் சிகை அலங்காரம் செய்த 2 இந்தியர்கள் கைது!

சிங்கப்பூர் சாலையில் சிகை அலங்காரம் செய்த 2 இந்தியர்கள் கைது!

695
0
SHARE
Ad

Tamil_Daily_News_79982721806சிங்கப்பூர், பிப் 25 – சிங்கப்பூர் சாலைகளில் முடி வெட்டும் பணி செய்ததற்காக இந்தியர் 2 பேரும், வங்கதேசத்தவர் ஒருவரும் கைது செய்யப்பட்டனர். சிங்கப்பூரில் சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், சட்டம்-ஒழுங்கை நிலைநாட்டவும், அந்நாட்டு அரசு கடும் சட்ட திட்டங்களை ஏற்படுத்தியுள்ளது.

இதனால் சிங்கப்பூரில் குற்றங்களும் குறைவு. சாலைகளில் அனுமதி இல்லாமல் வியாபாரம் செய்வதோ, ஆக்கிரமிப்பு செய்யவோ, குப்பைகளை கொட்டவோ முடியாது. அங்கு அங்கீகாரம் இல்லாத வேலை செய்வது சட்டப்படி குற்றம்.

வெளிநாட்டில் இருந்து வேலைக்காக வருகின்றவர்கள் அனுமதி வாங்கியுள்ள வேலையை தவிர வேறு வேலைகள் செய்வது அங்கு கடுமையான தண்டனைக்குரிய குற்றமாகும். இந்நிலையில், சாலையில் அனுமதியில்லாமல் முடி வெட்டும் பணியில் ஈடுபட்டதாக 2 இந்தியர்களும், வங்கதேசத்தவர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக சிங்கப்பூர் அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

இவர்கள் 3 பேரும், கட்டிட வேலைக்காக சிங்கப்பூர் வந்தவர்கள் என்றும், சிப்ட் முறையில் ஒவ்வொருவராக குறைந்த கட்டணத்துக்கு வெளிநாட்டினருக்கு முடி வெட்டிய தாகவும் போலீசார் தெரிவித்தனர். அங்கு முடி வெட்டிக் கொள்ள 10 சிங்கப்பூர் டாலர் செலவாகும்.

இதனால் பலர் அனுமதியில்லாமல் சட்டவிரோதமாக செயல்படும் இத்தகைய இடங்களில் முடி வெட்டி வருகின்றனர். சிங்கப்பூர் மனிதவள அமைச்சகம், மற்றும் சுற்றுச்சூழல் இயக்கத்தின் அதிகாரிகள் நடத்திய சோதனையின் போது இவர்கள் பிடிபட்டனர்.

இவர்களோடு முடி வெட்டும் பணியில் ஈடுபட்ட மற்றவர்கள், சோதனையின் போது தப்பி ஓடிவிட்டனர். போலீசாரின் விசாரணையின் போது இந்தியரான தாஸ் பாலேஷ் சந்திரா, ‘‘ என் அப்பா மரத்தில் இருந்து விழுந்துவிட்டார்.

அதனால் குடும்பத்தின் தேவைக்காக நான் அதிகம் சம்பாதிக்க வேண்டி இந்த தொழிலை செய்தேன்’’ என்று கூறியுள்ளார். இதை அங்குள்ள பத்திரிகைகள் வெளியிட்டுள்ளன. கடந்தாண்டு இதுபோல சட்டவிரோதமாக பணியாற்றிய 592 பேரை அரசு கைது செய்துள்ளது.

2012ல் 567 பேர் இந்த குற்றத்துக்காக கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தக் குற்றத்துக்கு தண்டனையாக 20,000 சிங்கப்பூர் டாலர்கள் அபராதமும், 2 வருட சிறைத் தண்டனையும் அளிக்கப்படும்.