Home நாடு நல்லிணக்கத்தை பாதிக்கும் கருத்துக்களை பரப்ப வேண்டாம் – நஜிப்

நல்லிணக்கத்தை பாதிக்கும் கருத்துக்களை பரப்ப வேண்டாம் – நஜிப்

434
0
SHARE
Ad

Najibகோலாலம்பூர், பிப் 26 – நாட்டிலுள்ள ஊடகங்கள், சமூக இணையத்தளங்கள் ஆகியவை தீவிரவாதிகளின் கருத்துக்களை வெளியிட்டு அவர்களுக்கு வீணான விளம்பரத்தை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டாம் என பிரதமர் நஜிப் துன் ரசாக் நேற்று தனது வலைப்பதிவில் தெரிவித்துள்ளார்.

அவர்களின் கருத்துக்களுக்கு கண்டனம் தெரிவிக்க வேண்டியதில்லை. மாறாக அவற்றைப் புறக்கணித்தாலே போதுமானது என்றும் நஜிப் குறிப்பிட்டுள்ளார்.

இது போன்ற தீவிரவாதிகள் சமூக வலைத்தளங்களை ஆக்கிரமித்து, தவறான கருத்துக்களை பரப்பி வருகின்றனர் என்றும், அது தவறு என்று தெரிந்தும் அதை மக்களை மற்றொருவருக்கு பரப்பக் கூடாது என்றும் நஜிப் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

இவர்களின் தவறான கருத்தால் நாட்டின் நல்லிணக்கத்திற்கு பாதிப்பு ஏற்படும் என்பதால், மக்கள் இது போன்ற தீவிரவாதிகளின் கருத்துக்களை புறக்கணிக்க வேண்டும் என்றும் நஜிப் கூறியுள்ளார்.