அப்போது படமாக்கப்பட்ட ஒரு காட்சியில் வங்காள வில்லன் நடிகர் தோடா ராய் சவுத்ரி நடித்தார். படப்பிடிப்பு முடிந்து சென்ற அவர் பத்திரிகைகளுக்கு பேட்டி அளித்தார். அப்போது பத்திரிக்கையாளர்களிடம் முருகதாஸ் பட கதையை அவர் கூறிவிட்டதாக கூறப்படுகிறது. இது பட தயாரிப்பாளருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதையடுத்து வில்லன் நடிகர் தோடாவின் வேடம் படத்தில் குறைக்கப்பட்டது. தோடா, படத்தின் வில்லன் கிடையாது. இன்னும் வில்லன் வேடத்துக்கு தகுதியான நடிகரை தேடிக்கொண்டிருக்கிறோம் என்று முருகதாஸ் கூறினார்.
கொல்கத்தாவில் படப்பிடிப்பு நடந்தபோது துரத்துதல் காட்சிக்காக சிலர் தேவைப்பட்டனர். அப்படி தேர்வானவர்தான் தோடா என்றார் இயக்குனர் முருகதாஸ். சமீபகாலமாக பெரிய இயக்குனர்கள் தங்கள் படங்களின் கதையை ரகசியமாக பாதுகாக்கின்றனர்.