உத்தரப்பிரதேசம், பிப் 26 – குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை செயல் இழந்தவர் என மத்திய அமைச்சர் சல்மான் குர்ஷித் விமர்சித்தற்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. உத்தரப்பிரதேச மாநிலத்தில் நடந்த பொது கூட்டத்தில் பேசிய சல்மான் குர்ஷித் நரேந்திர மோடியை மறைமுகமாக தாக்கி பேசினார்.
மோடி செயல் அற்றவர் என அவர் கூறிய கருத்தே கடும் கண்டனத்துக்கு உள்ளாகியுள்ளது. குர்ஷித்தின் கருத்து கண்ணிய குறைவானது என்று பாஜக செய்தி தொடர்பாளர் பிரகாஷ் ஜவ்தேகர் கூறியுள்ளார். குர்ஷித்தின் தரக்குறைவான விமர்சனத்திற்கு ராகுல் காந்தி தான் பதில் அளிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
தமது தொகுதியில் பிரசாரம் செய்து கொண்டிருந்த சல்மான் குர்ஷித் நரேந்திர மோடியை பெயர் குறிப்பிடாமல் தாக்கி பேசினார். மிக வலுவானவர், செயல் திறன் மிக்கவர் என்று போற்றப்படும் மோடியின் ஆட்சியில் கோத்ரா ரயில் எரிப்பு மற்றும் அதனை தொடர்ந்து நடந்த கலவரம் எப்படி நடைபெற்றது அதை தடுக்க தவறியது ஏன்? என்று சல்மான் குர்ஷித் கேள்வி எழுப்பினார்.
மக்களை மோடி கொன்று குவித்ததாக தாங்கள் குற்றம் சாட்டவில்லை என தெரிவித்த குர்ஷித் படுகொலையை தடுக்க தவறியவர் செயல் அற்றவர் தானே என்று கேள்வி எழுப்பினார் குர்ஷித்.