வாஷிங்டன், பிப் 27 – பாஜ.கட்சியே ஊழலை குறைத்து அதிக அளவிலான வேலைவாய்ப்பை உருவாக்கும் என 58 சதவீத மக்கள் நம்புவதாக அமெரிக்க ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் விரைவில் நடைபெறவுள்ள தேர்தலில் ஆளும் காங்கிரஸ் கட்சிக்கும் எதிர்கட்சியான பாஜகவிற்கும் இடையே கடும் போட்டி நிலவிவருகிறது.
இதில் 10-பேரில் ஆறு பேர் வரையில் பா.ஜ.,க ஆட்சியை கைப்பற்ற வேண்டுமென விரும்புகி்ன்றனர். 19 சதவீதத்தினர் காங்கிரஸ் கட்சியை ஆதரிக்கின்றனர் என பியூ ஆராய்ச்சியமைப்பு தெரிவித்துள்ளது. இந்த கணக்கெடுப்பு டிசம்பர் மாதம் 7-ஆம் தேதி முதல் 2014-ம் ஆண்டு ஜனவரி மாதம் 12-ஆம் தேதி வரையி்ல் நேரடியாக சுமார் 2 ஆயிரத்து 464 பேர்களிடம் கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது.
கணக்கெடுப்பின் படி 29 சதவீதத்தினர் தற்போதைய நிலைமையே போதும் எனவும் 70 சதவீதத்தினர் திருப்தி இல்லை எனவும் பதிலளித்துள்ளனர். இதன்படி 63 சதவீதம் பேர் பா.ஜ.கவையும் 19 சதவீதம் பேர் காஙகிரசையும் இதரபரிவினர் மாற்று கட்சிகளுக்கும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
வடக்கு பகுதியை சேர்ந்த மாநிலங்களான ராஜஸ்தான், அரியானா, பஞ்சாப், புதுடில்லி ஆகிய மாநிலங்களில் வசிக்கும் 400 மில்லியன் மக்கள் அடுத்ததாக ஆட்சி அமைப்பதற்கு பா.ஜ.வுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில் இக்கட்சிக்கு மகராஷ்டிரா, சட்டீஸ்கர், ஆகிய மாநிலங்களில் வாக்கு சதவீதம் குறைந்து காணப்படுகிறது.
அதே போல் காங்கிரஸ் செல்வாக்கு மிகுந்த இடங்களாக கிழக்கு பகுதி மாநிலங்கள் விளங்குகி்ன்றன. ஒடிசா, பீகார், மேற்குவங்கம்,ஜார்கண்ட், ஆகிய மாநிலங்களில் பலவீனமாகவும் உள்ளது என ஆய்வில் தெரிவி்க்கப்பட்டுள்ளது.
பா.ஜ.க ஆட்சிக்கு வரும் பட்சத்தி்ல அதிக அளவு வேலைவாய்ப்பை உருவாக்குவதில்பெரும் பங்கு வகிக்கும் என 58 சதவீத மக்களும், இதே பிரச்னைக்காக காங்கிரசை 20 சதவீதம மக்கள் ஆதரவு அளிக்க தயாராக உள்ளனர். நாட்டில் பயங்கரவாதத்தை குறைப்பது மற்றும் ஊழலை குறைத்து வேலை வாய்ப்பை அதிகரிப்பதில் காங்கிரஸ்கட்சியை விட பா.ஜ., சிறப்பாக செயல்படும் என மக்கள் நம்புவதாக பியூ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.