வாஷிங்டன், பிப் 27 – அமெரிக்காவில் உள்ள, இந்திய தூதரகங்களில், லஞ்சம் வாங்குவதாக புகார் கூறப்பட்டுள்ளது. அமெரிக்க வாழ் இந்தியர் சங்கத் தலைவர் ஜார்ஜ் ஆப்ரகாம் தலைமையிலான குழுவினர், சமீபத்தில் டில்லி வந்த போது, வெளியுறவு அமைச்சர் இ.அகமது, இணை அமைச்சர் பிரனீத் கவுர் ஆகியோரை சந்தித்தனர்.
இந்த அமைச்சர்களிடம், ஜார்ஜ் ஆப்ரகாம் கூறியதாவது அமெரிக்காவிலுள்ள இந்திய தூதரகங்களில், “விசா’ பெறுவதற்கு மிகவும் சிரமமாக உள்ளது. தூதரகங்களில் பணியாற்றும் சில ஊழியர்கள், தேவையற்ற காலதாமதம் செய்கின்றனர்.
பணம் கொடுத்தால் தான் சீக்கிரம் வேலை முடிகிறது. இந்த விவகாரம் பெரிதாவதற்குள், மத்திய அரசு தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன்மூலம், இந்திய அரசின் மதிப்பு, தொடர்ந்து பாதுகாக்கப்படும் என அமெரிக்க வாழ் இந்தியர் சங்கத் தலைவர் ஜார்ஜ் ஆப்ரகாம் கூறினார்.