Home இந்தியா வல்லரசு என்பதை விட பெண்களின் பாதுகாப்பு முக்கியம் – ராகுல் காந்தி!

வல்லரசு என்பதை விட பெண்களின் பாதுகாப்பு முக்கியம் – ராகுல் காந்தி!

741
0
SHARE
Ad

0f35207f-e42c-402f-ad7f-221b60844c70_S_secvpfகவுகாத்தி, பிப் 27 – இந்தியாவை வல்லரசாக மாற்றுவதைவிட, பேருந்தில் பயணம் செய்யும் பெண்ணுக்கு பாதுகாப்பை அளிப்பதுதான் முக்கியம் என அசாமில் பல்கலைக்கழக மாணவர்களிடம் ராகுல் காந்தி பேசினார். அசாம் மாநிலம் கவுகாத்திக்குச் சென்ற காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, அங்குள்ள டான்பாஸ்கோ பல்கலைக்கழக மாணவர்களிடம் பேசினார்.

அப்போது இந்தியா வல்லரசாக இருக்க வேண்டும் என எல்லோரும் பேசுகின்றனர். வல்லரசாவதில் என்ன இருக்கிறது? அதைவிட பேருந்தில் பயணம் செய்யும் பெண்ணுக்கு பாதுகாப்பு அளிப்பதுதான் முக்கியம். பேருந்தில் பயணம் செய்ய ஒரு மாணவி பயப்படும் நிலை இருக்கும்போது, வல்லரசு என கூறிக்கொள்வதில் என்ன அர்த்தம் உள்ளது?

நாட்டில் 50 சதவீதம் பேர் பெண்கள். ஆனால், அவர்களால் சுதந்திரமாக எங்கும் செல்ல முடியவில்லை. பாதுகாப்பு இல்லை என ஒவ்வொரு பெண்ணும் கூறுகின்றனர். அவர்கள் வேலைக்குச் சென்றால்கூட வேறுபாடு பார்க்கப்படுகிறது. இதுபற்றி யாரும் பேசுவதில்லை.

#TamilSchoolmychoice

பெண்களின் நிலை பற்றி ஆண்கள் சிந்திக்க வேண்டும். பெண்களை ஆண்கள் மோசமாக நடத்தினால் அழிவுதான். நாட்டில் உள்ள 50 சதவீத பெண்களை, ஆண்கள் சகோதரிகளாகவும், தாயாகவும் கருத வேண்டும்.

எனது 45 ஆண்டுகால அனுபவத்தில் பெண்களை ஆண்களை விட சிறந்தவர்களாகத்தான் பார்க்கிறேன். ஆண்களைவிட புத்திசாலிகளாகவும், திறமையானவர்களாகவும் இருக்கின்றனர்.

ஆனாலும் பெண்களை ஒவ்வொரு நாளும் அவமதித்துவிட்டு, இந்த நாடு வல்லரசாவதை பற்றி பேசுகிறது. பலாத்காரம் நடந்தால் நாடே கொந்தளிக்கிறது. அதுபோன்ற குற்றங்களுக்கு கடுமையான தண்டனை அளிக்கப்பட வேண்டும்.

வடகிழக்கு பகுதிகள் நாட்டின் மற்ற பகுதிகளுடன் அதிக தொடர்பு இல்லாமலுள்ளது. அதனால் வடகிழக்கு பகுதி மக்களின் திறமை சரியாக பயன்படுத்தப்படுவதில்லை. அருணாச்சல மாணவர் டெல்லியில் பாதுகாப்பாக இல்லை. அதனால் வடகிழக்கு பகுதி மக்கள், மற்ற பகுதிகளுக்கு செல்லவே அஞ்சுகின்றனர். இதுபோன்ற தடைகளை நாம் அகற்ற வேண்டும் என்றார் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி.