இப்படத்தில் நயன்தாரா கராத்தே தெரிந்த போலீஸ் அதிகாரியாக நடிப்பதால் அவர்களது சண்டை காட்சியை அதிரடியாக படமாக்குகிறாராம் ஜெயம்ராஜா. பில்லாவில் அதிரடி பக்கம் மெல்லமாக திரும்பிய நயன்தாரா, ஈ படத்தில் ஜீவாவுடன் மோதினார்.
அதையடுத்து ஆரம்பம் படத்திலும் ஒரு சண்டை காட்சியில் நடித்தவர், கஹானி ரீமேக்கான நீ எங்கே என் அன்பே படத்திலும் அதிரடி கதாநாயகியாக நடித்திருக்கிறார்.
பல படங்களில் அதிரடி வேடங்களில் நடித்து தன்னை தயார்படுத்தி விட்ட நயன்தாரா, ஜெயம்ரவியுடன் மோதும் சண்டை காட்சியில் இதற்கு முந்தைய சண்டை காட்சிகளை விட பிரம்மாண்டமாக இருக்க வேண்டும் என்பதற்காக, கூடுதல் சிரத்தை எடுத்து பயிற்சி எடுக்கப்போகிறாராம் நயன்தாரா.