Home உலகம் தாய்லாந்தில் விமான நிலையம் அருகே கட்டிடம் சரிந்து விழுந்து 11 பேர் பரிதாப பலி!

தாய்லாந்தில் விமான நிலையம் அருகே கட்டிடம் சரிந்து விழுந்து 11 பேர் பரிதாப பலி!

520
0
SHARE
Ad

bangladesh_27பாங்காக், பிப் 27 – தாய்லாந்தில் உள்ள பாங்காக் நகரில் சுவர்ணபூமி விமான நிலையத்தில் இருந்து சுமார் 20 கிமீ தொலைவில் மருத்துவமனை ஒன்று கட்டும் பணி நடைபெற்று வருகிறது. நேற்று வழக்கம் போல் ஏராளமான தொழிலாளர்கள் இதில் பணி புரிந்துகொண்டிருந்தனர்.

இந்த மருத்துவமனை சுமார் 5 மாடி அடுக்குகளை கொண்டு கட்டப்பட்டு வருகிறது. இந்நிலையில் பணியின் போது எதிர்பாராத விதமாக கட்டிடம் சரிந்து விழுந்தது. உடனடியாக தகவல் அறிந்த காவலர்கலும், மீட்பு படையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

இதுகுறித்து சம்பவம் நடந்த சமுத் பிரகார்ன் மாகாணத்தின் பாங்க் பிலி காவல்நிலைய அதிகாரி  கோரவாத் கூறுகையில், அங்கு இடிபாடுகளில் சிக்கி இருந்தவர்களை பல மணி நேரம் போராடி மீட்டனர்.

#TamilSchoolmychoice

இந்த விபத்தில் இடிபாடுகளில் சிக்கி 11 கட்டுமான தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர் என்று தெரிவித்தார். மேலும் காயமடைந்த 16 பேரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதித்துள்ளனர். இதில் பலரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.