Home இந்தியா வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது பா.ஜ.க!

வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது பா.ஜ.க!

597
0
SHARE
Ad

Naredra Modi addresses a Live Conferanceபுதுடில்லி, பிப் 28 – நாடாளுமன்றத்  தேர்தலுக்கான முதல் வேட்பாளர் பட்டியலை பா.ஜ.க.வெளியிட்டுள்ளது. மொத்தம் 54 இடங்களுக்கான வேட்பாளர் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. டில்லியில் நடந்த பா.ஜ.க. மத்திய தேர்தல் கமிட்டியின் 2 மணி நேர ஆலோசனைக்குப்பின் இந்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த பட்டியலின்படி, கட்சியின் முன்னாள் தலைவர் நிதின் கட்காரி, நாக்பூர் தொகுதியிலிருந்து போட்டியிடுகிறார். கோபிநாத் முண்டே மகாராஷ்டிர மாநிலம் பீட் தொகுதியிலிருந்தும், யுவ மோர்ச்சா தலைவர் அனுராக் தாகூர் ஹமீர்புர் தொகுதியிலிருந்தும் போட்டியிடுகின்றனர்.

பா.ஜ.க நேற்று வெளியிட்ட வேட்பாளர் பட்டியலில் இரண்டு முஸ்லிம் வேட்பாளர்கள் பெயரும் இடம்பெற்றுள்ளன. குலாம் முகமது மிர் ஜம்மு காஷ்மீர் மாநிலம் பாரமுல்லா தொகுதியிலிருந்தும், முஷ்டாக் அகமது மாலி அனந்த்நாக் தொகுதியிலிருந்தும் போட்டியிடுகின்றனர்.

#TamilSchoolmychoice

மொத்தமுள்ள 54 வேட்பாளர்களில் தலா 17 பேர், மகாராஷ்டிரா மற்றும் மேற்குவங்கத்திலிருந்தும், ஆறு பேர் ஒடிசாவிலிருந்தும், 5 பேர் ஜம்மு காஷ்மீர் மாநிலத்திலிருந்தும், 3 பேர் இமாச்சல பிரதேச மாநிலத்திலிருந்தும், தலா 2 பேர் கோவா, மணிப்பூர் மற்றும் அருணாச்சல பிரதேச மாநிலத்திலிருந்தும் போட்டியிடுகின்றனர்.