Home இந்தியா சட்டீஸ்கரில் மாவோ தாக்குதல் 6 காவலர்கள் பலி!

சட்டீஸ்கரில் மாவோ தாக்குதல் 6 காவலர்கள் பலி!

477
0
SHARE
Ad

8168b321-a871-4fe1-a4f4-3944e9e6402c_S_secvpfராய்ப்பூர், மார் 1 – சட்டீஸ்கர் மாநிலத்தில் மாவோ தீவிரவாதிகள் ஆதிக்கமுள்ளனர். அங்குள்ள தான்டேவாடா மாவட்டத்தில் குவகோண்டா பகுதியில் உள்ள காவல் நிலையத்தை சேர்ந்த இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட 10 காவலர்கள் மோட்டார் சைக்கிள்களில் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

குவகோண்டா , பச்சேலி செல்லும் சாலையில் சாலை அமைக்கும் பணி நடக்கிறது. இந்த பகுதியை காவலர்கள்  கடந்து செல்லும்போது, திடீரென தீவிரவாதிகள் துப்பாக்கியால் சரமாரியாக அவர்களை நோக்கி சுட்டனர். இதில், இன்ஸ்பெக்டர் சுக்லா உட்பட 6 காவகர்கள்  சம்பவ  இடத்திலேயே பலியாகினர். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் காட்டுக்குள் சென்று மறைந்து விட்டனர். பாதுகாப்பு படையினர் அவர்களை தேடி வருகின்றனர்.