Home நாடு சரவாக் மாநில ஆளுநராக தாயிப் பொறுப்பேற்றார்!

சரவாக் மாநில ஆளுநராக தாயிப் பொறுப்பேற்றார்!

557
0
SHARE
Ad

taibகூச்சிங், மார்ச் 1 – சரவாக் மாநிலத்தின் ஆளுநராக டான்ஸ்ரீ அப்துல் தாயிப் மாஹ்முட், இன்று பொறுப்பேற்றார்.

பேரரசர் துவாங்கு அப்துல் ஹாலிம் முவாட்ஸாம் ஷா முன்பு நேற்று அவருக்கு அதற்கான அதிகாரப்பூர்வ கடிதம் கொடுக்கப்பட்டது.

இந்நிகழ்வில், பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் மற்றும் துணைப்பிரதமர் டான்ஸ்ரீ முகைதீன் யாசின் மற்றும் அட்ணான் ஆகியோர் கலந்து கொண்டனர்.

#TamilSchoolmychoice

முன்னதாக தாயிப்பிற்கு இங்குள்ள விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. சுமார் ஆயிரம் பேருக்கும் மேற்பட்ட ஆதரவாளர்கள் விமான நிலையத்தில் கூடி வரவேற்பளித்தனர்.

சுமார் 33 வருடங்கள் சரவாக் மாநில முதலமைச்சராகப் பதவி வகித்த தாயிப், அண்மையில் தனது பதவியில் இருந்து விலகி, மாநில ஆளுநராகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.