Home இந்தியா காங்கிரஸ் தலைவர்கள் செவ்வாய் கிரகத்தில் இருந்து வந்தவர்களை போல் பேசுகிறார்கள்- மோடி!

காங்கிரஸ் தலைவர்கள் செவ்வாய் கிரகத்தில் இருந்து வந்தவர்களை போல் பேசுகிறார்கள்- மோடி!

389
0
SHARE
Ad

modi721ஹூப்ளி, மார் 1 – நாடு எதிர்கொண்டு வரும் பல்வேறு பிரச்னைகள், குறிப்பாக பெண்கள் சார்ந்த பிரச்னைகளில் காங்கிரஸும், அதன் தலைவர்களும் செவ்வாய் கிரகத்தில் இருந்து வந்தவர்களைப் போலவும், வானத்தில் இருந்து வந்தவர்களைப் போலவும் பேசுவதாக பா.ஜ., பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

கர்நாடகாவில் குல்பர்க் பகுதியைத் தொடர்ந்து ஹூப்ளியில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசிய அவர் இதனை தெரிவித்துள்ளார். கூட்டத்தில் மோடி பேசியதாவது, காங்கிரஸ்  தலைவர்கள் பேசுவதை நன்று கவனித்தால் அது வேற்று கிரகத்தில் இருந்து வந்தவர்களைப் போன்றும், வானத்தில் இருந்து வந்தவர்களின் பேச்சு போலவும் இருக்கும்.

நம் நாட்டில் நடைபெற்று வரும் பிரச்னைகளில் அவர்கள் பொறுப்புடன் நடந்து கொள்வதில்லை. அவர்கள் இப்போதுதான் முதல் முறையாக இந்த உலகத்திற்கு வந்திருப்பவர்களை போலவும், நாட்டில் நடைபெறும் தவறுகள் யாரோ ஒருவரால் நடத்தப்படுவது போலவும் நடந்து கொள்கின்றனர்.

#TamilSchoolmychoice

இத்தகைய பொறுப்பற்ற நபர்கள் வேறு எந்த நாட்டிலும் இருக்க முடியாது. இங்கு வந்து மகளிர் சுயஉதவி குழுக்களுடன் கலந்துரையாடிய ஒரு காங்கிரஸ் தலைவர், பெண்கள் அதிகாரம் பெறவேண்டும் என தெரிவித்துள்ளார்.  இது அவர்களின் அரசு இல்லாதது போலவும், அவர்களுக்கு அதிகாரம் இல்லாதது போலவும், யாரோ ஒருவர் செய்யும் தவறுகளுக்கு இவர்கள் பொறுப்பேற்பது போலவும் பேசியுள்ளார்.

அவர்களுக்கு நான் இந்த இடத்தில் சவால் விட நினைக்கிறேன்.  பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகம் நடைபெறுவது டில்லியில் தான்.  நாட்டிலேயே குஜராத்தில் தான் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறைவாகவுள்ளது  நாடு முழுவதிலும் இருந்து வந்து காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் கலந்துகொண்ட தலைவர்கள், பிரதமர் வேட்பாளர் குறித்த அறிவிப்பு வரும் என எதிர்பார்த்தனர்.

ஆனால் அவர்களுக்கு கிடைத்தது கூடுதலாக 3 மானிய சிலிண்டர்கள் வழங்கப்படும் என்பது மட்டுமே.
பெண்களின் பிரச்னைகள் குறித்து அதிகம் பேசும் காங்கிரஸ் தான் சுதந்திரம் பெற்றது முதல் பெரும்பாலும் ஆட்சியில் இருந்துள்ளது. ஆனால் 3.37 கோடி சமையல் சிலிண்டர் இணைப்புக்கள் மட்டுமே கொடுத்துள்ளது.

ஆனால் வாஜ்பாய் ஆட்சியின் போது 5 ஆண்டுகளில் 4 கோடி பேருக்கு சிலிண்டர் இணைப்பு கொடுக்கப்பட்டது. குஜராத் அரசில் பெண்களுக்கு அதிகாரம் மட்டுமின்றி, போதிய மரியாதையும், பாதுகாப்பும் வழங்கப்படுகிறது. இது தான் அடிப்படை பொறுப்பு. விவசாயிகளின் பிரச்னைகள் தீர்க்கப்பட வேண்டுமானால், அவர்களின் வாழ்க்கை முறை மாற வேண்டும்.

அவர்களுக்கு கூடுதல் மதிப்பு வழங்கப்பட வேண்டும்.  வேளாண் சார்ந்த தொழில்களுக்கும், வேளாண் உற்பத்திக்கும் அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும். ரூபாயின் மதிப்பு சரிவிற்கு நமது அரசை நடத்தும் பொருளாதார நிபுணர்களும், நடப்பு நிதி பற்றாக்குறையுமே காரணம்.  இறக்குமதி அதிகரித்ததும், ஏற்றுமதி குறைந்ததையுமே இது காட்டுகிறது. பொறுப்பான அரசு ஏற்றுமதியை அதிகப்படுத்த வேண்டும் என மோடி பேசியுள்ளார்.