Home உலகம் நாடாளுமன்ற விவாதத்தைக் கவனிக்காமல் ஆபாசப்படம் பார்த்த எம்.பி!

நாடாளுமன்ற விவாதத்தைக் கவனிக்காமல் ஆபாசப்படம் பார்த்த எம்.பி!

580
0
SHARE
Ad

downloadமாட்ரிட், மார் 1 –  ஸ்பெயின் நாட்டில் நாடாளுமன்ற விவாதம் நடந்து கொண்டிருந்த போது, அதில் கவனம் செலுத்தாமல் எம்.பி. ஒருவர் புத்தகத்தில் இருந்த ஆபாசப்படத்தை ரசித்துக் கொண்டிருந்தது அங்கிருந்த கேமராக் காட்சிகள் மூலம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. பொதுமக்கள் தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற, தங்கள் சார்பாக பணியாற்ற எம்.பி.க்களை தேர்வு செய்து நாடாளுமன்றத்திற்கு அனுப்பி வைக்கின்றனர்.

ஆனால், அவ்வாறு தேர்வாகி பதவிக்கு வரும் மக்கள் பிரதிநிதிகள் தங்கள் கடமைகளைச் சரிவரச் செய்கிறார்களா என்றால், கேள்விக்குறி தான். அந்தவகையில், ஸ்பெயின் நாட்டு எம்.பி ஒருவர் நாடாளுமன்றத்தில் வைத்து ஆபாசப் படம் பார்க்கும் வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

மிகுல் ஏஞ்சல் ரெவிலா என்ற 71 வயது ஸ்பெயின் நாட்டு எம்.பி, அந்நாட்டு நாடாளுமன்றதில் விவாதம் நடைபெற்றபோது, அதனைக் கவனிக்காமல் புத்தகம் படித்துக் கொண்டிருந்திருக்கிறார். அதில், கிட்டரை மட்டும் ஆடையாக வைத்துக்கொண்டு மாடல் ஒருவர் பேட்டி அளித்துள்ளார். அப்புத்தகத்தில் அவர் ஆடையில்லாமல் இருக்கும் பெண்ணின் படத்தை பார்த்து கொண்டு இருப்பது போன்றக் காட்சிகள் அங்கிருந்த கேமராவில் படமாகிவிட்டது.

#TamilSchoolmychoice

தற்போது அந்தக் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டுள்ளது. அதனை பார்த்த அந்நாட்டு மக்கள் அவருக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். ஆனால் எம்.பி. தன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டை மறுத்துள்ளார். ‘தான் அந்த இதழில் வந்த கட்டுரை ஒன்றை படிக்க பக்கங்களை திருப்பிய போது இந்த படம் வந்துள்ளது’ என அவர் விளக்கமளித்துள்ளார்.