Home இந்தியா ஏப்ரல் 2வது வாரத்தில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல் – 7 கட்டங்களாக நடத்தப்படலாம்!

ஏப்ரல் 2வது வாரத்தில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல் – 7 கட்டங்களாக நடத்தப்படலாம்!

486
0
SHARE
Ad

Indian Parliament 440 x 215மார்ச் 2 – மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் இந்திய நாடாளுமன்றத்திற்கான தேர்தல் எதிர்வரும் ஏப்ரல் 7 முதல் 10ஆம் தேதிக்குள் நடைபெறலாம் என்றும் இதுவரை இல்லாத அளவுக்கு 6 அல்லது 7 கட்டங்களாக நடத்தப்படக் கூடும் என்றும் இந்தியத் தேர்தல் ஆணையத்தைச் சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

#TamilSchoolmychoice

இருப்பினும் தேர்தல் ஏற்பாடுகள் இன்னும் நுணுக்கமாக வரையப்பட்டு வருகின்றன என்றும் கூடிய விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவரும் என்றும் தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்த முறை தேர்தலுக்காக சுமார் 81 கோடி வாக்காளர்கள் பதிந்து கொண்டுள்ளனர்.

2009ஆம் ஆண்டில் நடைபெற்ற பொதுத் தேர்தல் ஏப்ரல் 16 முதல் மே 13 வரை நடைபெற்றது என்பதும் அப்போது 5 கட்டங்களாக நடத்தப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த வார இறுதிக்குள் பொதுத் தேர்தல் குறித்த தேதிகள் அறிவிக்கப்பட்டு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

நடப்பு அரசாங்கத்தின் ஆட்சிக்காலம் எதிர்வரும் ஜூன் 1ஆம் தேதியோடு நிறைவு பெறுகின்ற காரணத்தால் புதிய நாடாளுமன்றம் எதிர்வரும் மே 31ஆம் தேதிக்கு முன்பாக தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.

நாடாளுமன்றத் தேர்தலோடு சேர்ந்து ஆந்திரப் பிரதேசத்திலும் அந்த மாநிலத்திலிருந்து பிரிக்கப்பட்ட தெலுங்கானா மாநிலத்திலும் சட்டமன்றத் தேர்தல்களும் நடைபெறும். ஒரிசா, சிக்கிம் ஆகிய மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தலும் நாடாளுமன்றத் தேர்தலோடு சேர்த்து நடத்தப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.