Home இந்தியா வேட்பாளர் தேர்வு முறை சரியில்லை,ராகுலின் திட்டத்திற்கு மத்திய அமைச்சர் பெனிபிரசாத் வர்மா எச்சரிக்கை!

வேட்பாளர் தேர்வு முறை சரியில்லை,ராகுலின் திட்டத்திற்கு மத்திய அமைச்சர் பெனிபிரசாத் வர்மா எச்சரிக்கை!

507
0
SHARE
Ad

beni-prasad-vermaபுதுடில்லி, மார் 3 – வேட்பாளர் தேர்வில் ராகுலின் முதன்மை அமைப்பு சோதனை உத்திரபிரதேசத்தில் எடுபடாது என மத்திய அமைச்சர் பெனிபிரசாத் வர்மா எச்சரிக்கை விடுத்துள்ளார். வரும் நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரம் உத்திரபிரதேசத்தில் சரியான பாதையில் செல்லவில்லை என்கிறார் பெனி பிரசாத் வர்மா.

மேலும் காங்கிரஸ் கட்சிக்கு 50 தொகுதிகளில் வெற்றி பெறலாம். அதுவும் சரியான முறையில் சீட் கொடுக்கப்பட்டால்தான், சரியான முறையில் திட்டமிட்டால்தான் அந்த 50 தொகுதிகளில் வெற்றிபெறும் வாய்ப்புள்ளது. தற்போதைய திட்டத்தில் வேட்பாளர் தேர்வு முறை சரியில்லை. எனவே ஏற்கனவே கடந்தகால தேர்தல்களில் எந்தவகையை பின்பற்றினார்களோ அதே நடைமுறைதான் பின்பற்றபட வேண்டும்.

ராகுலின் இத்தகைய ஜனநாயக முறை சிறந்த ஒன்றுதான். ஆனால் அது உத்திரபிரதேச மாநிலத்தில் இது பொருந்தாது என்றார் பெனி பிரசாத் வர்மா. காங்கிரசுக்கு பெரும் ஆதரவு 20-சதவீத முஸ்லீம்கள்தான். வேட்பாளர்களுக்கு ஒதுக்கப்படும் சீட் சரியாக இருந்தாலே காங்கிரசுக்கு 50 தொகுதிகளில்தான் வெற்றி கிடைக்கும் என்றார் பெனிபிரசாத் வர்மா.

#TamilSchoolmychoice

சீட்கள் நேர்மையாக, முறையாக வழங்கப்பட்டு பிரசாரம் சரியாக நடக்க வேண்டும் அவ்வாறு செய்தால் மட்டுமே மாநிலத்தில் 50 தொகுதிகளில் வெற்றி பெறலாம். 20 சதவீத முஸ்லீம் ஓட்டுக்களையும் பெறலாம். மாநிலத்தில் காங்கிரஸ் தலைமை சரியில்லாமல் இருப்பதால் வேட்பாளர்களுக்கு சீட் கொடுப்பதில் வெற்றி பெற ஒத்துழைக்கவில்லை.

காங்கிரஸ் கட்சி நாட்டின் டி.என்.ஏ. அதனால்தான் மற்ற கட்சிகளால் தோற்கடிக்கப்பட முடியாது. சமஜ்வாடி கட்சி தலைவர் முலாயம் சிங் மற்றும் ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் இருவரும் பல்வேறு பேரணிகளை ஒரே நாளில் நடத்திவருகின்றனர்.அவையெல்லாம் உத்திரபிரதேசத்தில் தோற்றுவிடும் என்றார் பெனி பிரசாத் வர்மா.