Home இந்தியா உலக பணக்காரர்கள் பட்டியல்: முகேஷ் அம்பானிக்கு 41 வது இடம்!

உலக பணக்காரர்கள் பட்டியல்: முகேஷ் அம்பானிக்கு 41 வது இடம்!

937
0
SHARE
Ad

59புதுடெல்லி, மார்ச் 3 – சீனாவைச் சேர்ந்த  ஹருண் நிறுவனம் 2014–ஆம் ஆண்டிற்கான உலக பணக்காரர்கள் பட்டியலை தயாரித்துள்ளது.

அதன் படி, இந்தியாவிலுள்ள 70 உலகப் பணக்காரர்களில், ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார்.அவரின் சொத்து மதிப்பு  1,800 கோடி டாலர் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இந்திய அளவில் முதலிடத்தையும், உலக அளவில் 41 ஆவது இடத்தைப் முகேஷ் அம்பானி பிடித்துள்ளார்.

அவரை அடுத்து, இந்தியாவைச் சேர்ந்த  லட்சுமி மிட்டல் 49வது இடத்திலும், சன்பார்மா நிறுவனத்தின் திலிப்சங்கவி மற்றும் விப்ரோவின் அசிம் பிரேம்ஜி ஆகிய இருவரும் 77வது இடத்தையும் பிடித்துள்ளனர்.

#TamilSchoolmychoice

மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் 6,800 கோடி டாலர் சொத்து மதிப்பை பெற்று, உலக பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.

வாரன் பஃபெட் இரண்டாவது இடத்திலும், அமான்சியோ ஆர்டிகோ மூன்றாவது இடத்திலும், கார்லோஸ் ஸ்லிம் நான்காவது இடத்திலும் உள்ளனர்.

அதிக கோடீஸ்வரர்களை கொண்டுள்ளதில் உலக அளவில் இந்தியா ஐந்தாவது இடத்தில் உள்ளது. அமெரிக்கா மற்றும் சீனா முறையே முதல் மற்றும் இரண்டாவது இடங்களில் உள்ளன.உலகப் பணக்காரர்களின் சராசரி வயது 64 ஆகும்.

இங்கிலாந்து, ஜப்பான், சுவிட்சர்லாந்து, இந்தியா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளில் உலகப் பணக்காரர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. சர்வதேச அளவில் உலகப் பணக்காரர்கள் அதிகம் உள்ள முன்னணி 6 நகரங்களில் மும்பையும் ஒன்றாகும். மும்பையில் மொத்தம் 33  உலகப் பணக்காரர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.