மேலும் போர் அச்சுறுத்தல்கள் அதிகமுள்ள ஆப்கானிஸ்தான், சிரியா போன்ற நாடுகளில் கூட ஆபத்து குறைவு என்று அந்த புள்ளி விவரம் தெரிவிக்கிறது. 2013ல் இந்தியாவில் 212 குண்டு வெடிப்புகளால் இந்தியா பாதிப்படைந்துள்ளதாகவும், இது ஆப்கானிஸ்தானை காட்டிலும் இருமடங்கு அதிகமாக உள்ளதாகவும் அறிவித்துள்ளது.
அதாவது ஆப்கானிஸ்தானில்108 குண்டு வெடிப்புகள் நடந்திருக்கிறது. இந்நிலை 2012ல் 241 குண்டுவெடிப்புகள் நடந்திருந்தது.அது 2013ல் 212 ஆக குறைந்துள்ளது. அதேமாதிரி குண்டு வெடிப்பு பாதிப்பால் 130 பேர் பலியாகியிருந்ததாகவும், 466 காயமடைந்தார்கள் எனவும் வெளியிட்டுள்ளது.
இந்தியா, பாகிஸ்தான் மற்றும் ஈராக் ஆகிய நாடுகளில் தான் 75 சதவீத குண்டுவெடிப்பு உள்ளதாக தகவல் தெரிவி்க்கிறது. இதுவே மக்களை குறிவைத்து நடத்தும் தாக்குதல் 69 சதவீதமாக உலக நாடுகளில் பதிவாகி உள்ளது. அதே போல இந்தியாவில் பாதுகாப்பு படைகள் மற்றும் அரசு சொத்தின் மீது தாக்குதல் 58 சதவீதமாக பதிவாகியுள்ளது.