Home இந்தியா நாடாளுமன்ற தேர்தலில் 2 தொகுதிகளில் நரேந்திர மோடியை நிறுத்த பாஜக மேலிடம் முடிவு!

நாடாளுமன்ற தேர்தலில் 2 தொகுதிகளில் நரேந்திர மோடியை நிறுத்த பாஜக மேலிடம் முடிவு!

499
0
SHARE
Ad

narendra_modiபுதுடெல்லி, மார் 4 – வரும் நாடாளுமன்ற தேர்தலில் 2 தொகுதிகளில் நரேந்திர மோடியை நிறுத்த பாஜக மேலிடம் முடிவு செய்துள்ளது. நாடாளுமன்ற மக்களவைக்கு வரும் ஏப்ரல், மே மாதங்களில் தேர்தல் நடைபெற இருக்கிறது. கடந்த வாரம் பாஜகவின் முதல் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் பாஜ முன்னாள் தலைவர் நிதின்கட்கரி உள்பட 54 பேரின் பெயர்கள் இடம் பெற்றிருந்தன.

பாஜக பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள குஜராத் முதல்வர் நரேந்திர மோடி உ.பி. மாநிலம் வாரணாசியில் போட்டியிடுவார் என கடந்த வாரம் செய்திகள் வெளியாயின. இந்த தொகுதியின் தற்போதைய உறுப்பினர் முரளி மனோகர் ஜோஷி லக்னோவில் போட்டியிடுவார் என கூறப்பட்டது.

80 தொகுதிகளை கொண்ட உத்திர பிரதேசத்தில் அதிக இடங்களை பிடிக்க வேண்டும் என்ற லட்சியத்தில் மோடியை நிறுத்த பாஜ முடிவு செய்திருப்பதாக தெரிகிறது. இருப்பினும் சொந்த மாநிலத்தையும் விட்டு விடக்கூடாது என்பதால் குஜராத்திலும் ஒரு தொகுதியில் மோடியை நிறுத்த பாஜ மேலிடம் முடிவு செய்துள்ளது.

#TamilSchoolmychoice

மார்ச் 13-ஆம் தேதி பாஜகவின் மத்திய தேர்தல் கமிட்டி கூட்டம் நடைபெற இருக்கிறது. இதன்பின்னர் பாஜகவின் அடுத்த வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். இதில் நரேந்திரமோடி மற்றும் பாஜக தலைவர் ராஜ்நாத்சிங் ஆகியோரது பெயர் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.