கோலாலம்பூர், மார்ச் 6 – ஓரினப்புணர்ச்சி வழக்கில் எதிர்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிமின் விடுதலைக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள மேல்முறையீடு மீதான விசாரணை இன்று மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் நடக்கிறது.
நீதிமன்றம் விசாரணையை இன்றும், நாளையும் இரண்டு நாட்கள் நடத்தவுள்ளது.
அம்னோ வழக்கறிஞரான சபி அப்துல்லா இந்த மேல்முறையீட்டு வழக்கில் வழக்கறிஞர் குழுவிற்கு தலைமை தாங்கக் கூடாது என்று மூன்று முறை விண்ணப்பித்தும், அன்வார் தனது முயற்சியில் தோல்வி கண்டது குறிப்பிடத்தக்கது.
இன்று நடக்கும் இந்த விசாரணை, அனைத்துலக நாடாளுமன்ற ஒன்றியம், அனைத்துலக மனித உரிமை கூட்டமைப்பு மற்றும் அனைத்துலக சட்டத்துறை வல்லுநர்கள் வாரியம் போன்ற அமைப்புகளால் கவனிக்கப்படும் என்றும் கூறப்படுகின்றது.