Home கலை உலகம் கமலுடன் நடிக்கவில்லை – சிம்ரன் மறுப்பு!

கமலுடன் நடிக்கவில்லை – சிம்ரன் மறுப்பு!

562
0
SHARE
Ad

24-kamal-simran-2-600சென்னை, மார்ச் 7 – கமல்ஹாஸனுக்கு ஜோடியாக நான் நடிக்கவில்லை. நான் எந்தெந்த படத்தில் நடிக்கிறேன் என்ற விவரங்களை விரைவில் பத்திரிகையாளர்களிடம் சொல்கிறேன் என்று சிம்ரன் தெரிவித்துள்ளார்.  மலையாளத்தில் மோகன்லால் – மீனா நடிப்பில் பெரும் வெற்றி பெற்ற த்ரிஷ்யம் படம் தமிழில் படமாகிறது. இந்தப் படத்தில் கதாநாயகனாக கமல் நடிக்கிறார்.

அவருக்கு ஜோடியாக நதியா நடிப்பார் என்று கூறப்பட்டது. பின்னர் சிம்ரனிடம் பேசியிருப்பதாகவும், இதற்கு கமலும் சம்மதித்ததாகவும் செய்திகள் வெளியாகின. ஆனால் நடிகை சிம்ரன் இந்த செய்திகளை மறுத்துள்ளார். அவர் விடுத்துள்ள அறிக்கையில், த்ரிஷ்யம் தமிழில் நான் நடிப்பதாக வந்த செய்திகளில் உண்மையில்லை.

இன்னும் சொல்லப் போனால், அந்தப் படத்தின் எந்த மொழி படப்பிடிப்பிலும் நான் நடிக்கவில்லை. எனது அடுத்தடுத்த படங்கள் என்னவென்பது குறித்து விரிவாக பத்திரிகையாளர்களிடம் தெரிவிப்பேன்  என்று கூறியுள்ளார் சிம்ரன். இதற்கிடையில், த்ரிஷ்யம் தமிழில் கமலுக்கு ஜோடியாக கவுதமியையே நடிக்க வைக்கவும் முயற்சி மேற்கொண்டுள்ளனர்.