Home அவசியம் படிக்க வேண்டியவை அன்வாரின் சிறைத்தண்டனை: பக்காத்தான் முழுவதும் ஆத்திரமும் சோகமும்! தலைவர்கள் கண்டனம்!

அன்வாரின் சிறைத்தண்டனை: பக்காத்தான் முழுவதும் ஆத்திரமும் சோகமும்! தலைவர்கள் கண்டனம்!

564
0
SHARE
Ad

Anwar-Ibrahim_1568721cமார்ச் 7  – எதிர்பாராத திருப்பமாக அன்வார் இப்ராகிம் மீது 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருப்பதைத் தொடர்ந்து பக்காத்தான் ராயாட் கூட்டணியில் இன்று ஆத்திரமும் சோகமும் கரைபுரண்டோடத் தொடங்கியது.

#TamilSchoolmychoice

இது அன்வாருக்கு எதிரான மற்றொரு சதி என்று பக்காத்தான் தலைவர்கள் குறை கூறியதோடு தங்களின் கடுமையான கண்டனங்களையும் புலப்படுத்தியுள்ளனர். அன்வாரின் மீதான குற்றச்சாட்டு உறுதிப்படுத்தப்பட்டு தண்டனையைக் குறைப்பது மீதான தங்களின் வாதங்களை ஒரு மணி நேரத்தில் சமர்ப்பிக்க வேண்டுமெனஅன்வாரின் வழக்கறிஞர்களுக்கு நீதிபதிகள் உத்தரவிட்ட கணம் முதல், பிரபல நட்பு ஊடகமான ட்விட்டர் மூலம் குறுந்தகவல்கள் தீயாகப் பரவத் தொடங்கின.

அன்வாரின் சிறைத்தண்டனையும் அந்த கணம் முதல் பரவலாக எதிர்பார்க்கப்பட்டது.

அன்வார் மீதான தீர்ப்பு வழங்கப்பட்டதும் அன்வாரின் மனைவியும் மகள்களும் அவரைக் கட்டிப் பிடித்து கண் கலங்கினர்.

ட்விட்டரில் தனது கருத்துக்களை குறுந்தகவல்களாக உடனுக்குடன் பதிவு செய்த ஜசெக தலைவர் லிம் கிட் சியாங், அன்வாரின் சிறைத் தண்டனையை அடுத்து கர்ப்பால் சிங்கும் தேச நிந்தனை வழக்கில் அடுத்ததாக சிறைத் தண்டனையைப் பெறுவாரா எனக் கேள்வி எழுப்பியிருந்தார்.

அவசரம் அவசரமான தீர்ப்பு – கர்ப்பால் கருத்து

Karpal Singhஎனது நீண்ட கால வழக்கறிஞர் தொழிலில் இதுபோன்று அவசரம் அவசரமாக தீர்ப்பு வழங்கப்பட்ட வழக்கை நான் சந்தித்ததில்லை” என்று அன்வார் சார்பில் வாதாடிய கர்ப்பால் கருத்து தெரிவித்துள்ளார்.

அன்வாரின் மீது வழங்கப்பட்ட சிறைத்தண்டனையைக் குறைப்பதற்கு வாதங்களை சமர்ப்பிக்க அன்வாரின் மருத்துவ அறிக்கை தேவைப்படுகின்றது என்றும் அதனை ஏற்பாடு செய்ய மேலும் ஒரு வாரம் அவகாசம் தேவைப்படுகின்றது என்றும் கர்ப்பால் கேட்டுக் கொண்டாலும் அதனை ஏற்க நீதிபதிகள் மறுத்துவிட்டனர்.

இதனைத் தொடர்ந்து இந்த நீதிமன்றம் நியாயமில்லாமல் நடந்து கொள்கின்றது என்றும் கர்ப்பால் நீதிபதிகள் முன்னிலையில் கடும் கண்டனம் தெரிவித்தார்.

மேலும் அன்வாரின் ஓரினப் புணர்ச்சி வழக்கால் நாடு தேசியப் பாதுகாப்புப் பிரச்சனையை எதிர்நோக்கியுள்ளது என அரசாங்கத் தரப்பு வழக்கறிஞர் ஷாபி கூறியுள்ள கருத்துக்கும் கர்ப்பால் சிங் தனது எதிர்ப்பைத் தெரிவித்துள்ளார்.

“நான் இல்லாவிட்டாலும் கட்சி மேலும் வலுவாகும்” – அன்வார் உறுதி

தனது தீர்ப்பு பற்றி கூறும்போது 16 ஆண்டுகளுக்குப் பிறகு  நான் எல்லாவற்றையும் மீண்டும் சந்திக்க வேண்டியுள்ளது என்று விரக்தியுடன் கூறிய அன்வார், இருப்பினும் தான் இல்லாவிட்டாலும் பிகேஆர் கட்சி மேலும் வலுவுடன் திகழும் என்றும் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

“இது ஒரு நீண்ட காலப் போராட்டம். எனது போராட்டம் ஓயாது. என்னைச் சிறையில் தள்ளினாலும் ரிபோர்மாசி (மறுமலர்ச்சி) இயக்கம் மேலும் வலுவுடன் பெரிதாகும்” என்றும் அன்வார் முழக்கமிட்டுள்ளார்.

தான் காஜாங் தொகுதியில் போட்டியிடாவிட்டாலும், காஜாங்கில் மேலும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் பிகேஆர் மீண்டும் அந்தத் தொகுதியை வெல்ல முடியும் என்றும் அன்வார் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.