Home நாடு காணாமல் போன விமானத்தின் பகுதிகள் கண்டெடுக்கப்பட்டனவா?

காணாமல் போன விமானத்தின் பகுதிகள் கண்டெடுக்கப்பட்டனவா?

448
0
SHARE
Ad

MAS logo 440 x 215மார்ச் 9 – வியட்னாமிய கடல் பகுதியில் காணாமல் போன மாஸ் விமானத்தின் சில பகுதிகள் வியட்னாமிய கடற்படை விமானம் ஒன்றால் கண்டெடுக்கப்பட்டதாக வியட்னாமின் பொதுப் போக்குவரத்து இலாகாவின் இணையத் தளப் பக்கத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று சனிக்கிழமை 239 பயணிகளுடன் காணாமல் போன MH 370 விமானத்தைத் தேடும் முயற்சியில் பல நாடுகளின் விமானங்களும் கடற்படைகளும் ஈடுபட்டு வந்தன. தென் வியட்னாமில் கடல் பகுதியில் கண்டெடுக்கப்பட்ட சில பாகங்கள் காணாமல் போன விமானத்தின் பாகங்களா என்பதை இன்னும் நிர்ணயிக்க முடியவில்லை என்றும் அந்த இடத்திற்கு மேலும் சில தேடுதல் விமானங்கள் அனுப்பப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

இதுவரையில் காணாமல் போன விமானத்தைத் தேடும் பணியில் 34 விமானங்களும் 40 கப்பல்களும் ஈடுபடுத்தப்பட்டிருந்தன.