Home உலகம் “அமெரிக்க வரலாற்றில் மோசமான அதிபர் ஒபாமா” – போபி ஜிண்டால் சாடல்

“அமெரிக்க வரலாற்றில் மோசமான அதிபர் ஒபாமா” – போபி ஜிண்டால் சாடல்

787
0
SHARE
Ad

Bobby Jindal 440 x 215வாஷிங்டன், மார்ச் 9 – போபி ஜிண்டால் அமெரிக்காவின் முதலாவது இந்திய வம்சாவளி மாநில ஆளுநராக லூசியானா ஆளுநராக (கவர்னராக) தேர்வு பெற்று சரித்திரம் படைத்தவர். அடுத்த அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சியின் பிரதிநிதியாக அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியில் குதிக்கும் வாய்ப்பு உள்ளவர் எனக் கருதப்படுபவர்.

#TamilSchoolmychoice

அமெரிக்க வரலாற்றிலே மிகவும் மோசமான அதிபராக ஒபாமா திகழ்கின்றார் என பாபி ஜிண்டால் சாடியுள்ளார்.

“நான் இதுவரை பார்த்த அமெரிக்க அதிபர்களில் ஜிம்மி கார்ட்டர்தான் மிகவும் மோசமானவராக இருந்தார் என்பதை அறிந்திருந்தேன். ஆனால் தற்போதைய சூழ்நிலையில் ஒபாமாதான் மிகவும் மோசமானவராக உள்ளார்” என பாபி ஜிண்டால் கருத்து தெரிவித்துள்ளார்.

அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டனில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பாபி ஜிண்டால் இவ்வாறுகூறியுள்ளார்.