Home கலை உலகம் என் அப்பா ரஜினிக்கு அரசியல் வேண்டவே வேண்டாம்-ஐஸ்வர்யா தனுஷ்!

என் அப்பா ரஜினிக்கு அரசியல் வேண்டவே வேண்டாம்-ஐஸ்வர்யா தனுஷ்!

616
0
SHARE
Ad

896d2f8b-7729-435d-9fba-39668a9f1842HiResசென்னை, மார்ச் 10 – என் அப்பா ரஜினிகாந்த் அரசியலில் ஈடுபட வேண்டாம் என்றே நான் நினைக்கிறேன் என ஐஸ்வர்யா தனுஷ் தெரிவித்துள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகள், தனுஷின் மனைவி என்றதையும் தாண்டி இயக்குனர் என்று தனக்கென ஒரு அடையாளத்தை வைத்திருப்பவர் ஐஸ்வர்யா.

இந்நிலையில் தனது தந்தை மற்றும் கணவர் பற்றி ஐஸ்வர்யா கூறுகையில், தனஷ் பல விதங்களில் என் தந்தை ரஜினிகாந்த் போன்றவர். என் தந்தை நேரத்திற்கு முக்கியத்துவம் அளிப்பவர். தனுஷும் அப்படித் தான். தனுஷ் என் தந்தை போன்று இருப்பதால் தானோ என்னவோ அவரை நான் திருமணம் செய்து கொண்டேன்.

என் தந்தை அமைதியாக வாழ விரும்புகிறேன். அதனால் அவர் அரசியலுக்கு வர வேண்டாம் என்று நினைக்கிறேன். அவர் கிங்காக இருக்க வேண்டாம். கிங் மேக்கராக இருந்தால் போதும் என ஐஸ்வர்யா தெரிவித்தார்.