Home உலகம் பெண் போராளிகளின் உடல்களை பாலியல் வன்கொடுமைகள் செய்தது இலங்கை ராணுவம்! புதிய ஆவணப்படம்

பெண் போராளிகளின் உடல்களை பாலியல் வன்கொடுமைகள் செய்தது இலங்கை ராணுவம்! புதிய ஆவணப்படம்

1049
0
SHARE
Ad

10-1394436235-srilankan-war-crime343-600-jpgலண்டன், மார்ச் 10 – இலங்கையில் இறுதிப் போரின்போது இறந்த பெண் போராளிகளின் உடல்களுக்கு இலங்கை ராணுவத்தினர் பாலியல் வன்கொடுமைகளை செய்ததாக சேனல் 4 தொலைக்காட்சியின் இயக்குனர் கெல்லம் மெக்ரே தெரிவித்துள்ளார். இலங்கையில் நடந்த போர்க்குற்றம் குறித்து சேனல் 4 ஏற்கனவே பல ஆதாரங்கள் அடங்கிய படங்களை வெளியிட்டுள்ளது.

இந்நிலையில் அது மேலும் ஒரு படத்தை வெளியிட்டுள்ளது. அந்த புதிய படத்தில் இலங்கை ராணுவத்தினர் இறந்து கிடக்கும் பெண் போராளிகளின் உடல்களுக்கு பாலியல் வன்கொடுமைகளை செய்யும் செயல் பார்ப்பவர்களை அதிர்ச்சி அடைய வைக்கிறது. அந்த படத்தை வெளியிட்ட சேனல் 4 ஆவணப் பட இயக்குனர் கெல்லம் மெக்ரே கூறுகையில்,

போரில் 5 பேர் இறப்பது சிறிய விஷயமாக இருக்கலாம். ஆனால் போரின் இறுதி கட்டத்தில் அரசின் ஷெல் தாக்குதல்களால் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டது சிறிய விஷயமல்ல.

#TamilSchoolmychoice

போரில் கொல்லப்பட்ட பெண் போராளிகளின் உடல்கள் மீது இலங்கை ராணுவத்தினர் மீண்டும், மீண்டும் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளனர். அந்த கானொலி எப்பொழுது எடுக்கப்பட்டது என்று தெளிவாகத் தெரியவில்லை.

அந்த படம் போரின் இறுதி ஆண்டு அல்லது அதற்கு முன்பு எடுக்கப்பட்டிருக்கலாம். அப்படத்தை ராணுவ வீரர் ஒருவர் எடுத்துள்ளார்.missing-ltte-girl4 மற்றொரு வீரர் அதில் சிங்கள மொழியில் பேசுகிறார். வீரர்கள் பாலியல் வன்கொடுமைகள் செய்து சிரித்து மகிழ்கின்றனர்.

அந்த ஆவணப்படம் உண்மையானது தான் என்று முன்னணி தடய அறிவியல் நிபுணரான கலாநிதி ரிச்சர்ட் ஷெப்பர்ட் தெரிவித்துள்ளார். இறந்தவர்களின் உடல்களில் இருக்கும் காயம் போர்க்களத்தில் ஏற்பட்டதல்ல என்றும், அவை துப்பாக்கியால் சுடப்பட்டதால் ஏற்பட்டிருக்கலாம் என்றும் ஷெப்பர்ட் தெரிவித்துள்ளார்.

அந்த ஆவணப்படம் குறித்து இலங்கை அரசு கூறுகையில், விடுதலைப் புலிகள் ராணுவத்தினர் போன்று சீருடை அணிந்து சிங்களத்தில் பேசியுள்ளனர் என்று தெரிவித்துள்ளது.

விடுதலைப்புலிகள் தொலைக்காட்சி அறிவிப்பாளர் போரின் போது சிக்கி படுகொலை செய்யப்பட்ட படங்களை நாங்கள் வெளியிட்டோம். ஆனால் அவர் துப்பாக்கிச்சூட்டில் இறந்ததாக இலங்கை அரசு தெரிவித்தது என்றார் மெக்ரே.