Home நாடு ஐரோப்பிய கடப்பிதழில் ஆசியர்கள் பயணம் – குடிநுழைவுத் துறையை சாடிய சாஹிட்

ஐரோப்பிய கடப்பிதழில் ஆசியர்கள் பயணம் – குடிநுழைவுத் துறையை சாடிய சாஹிட்

691
0
SHARE
Ad

zahid-hamidiகோலாலம்பூர், மார்ச் 10 – ஆசியர்கள் போன்ற தோற்றமளிக்கும் இருவர் ஐரோப்பிய கடப்பிதழைக் கொடுக்கும் போது குடிநுழைவுத்துறை அதிகாரிகள் ஏன் அவர்களை சந்தேகிக்கவில்லை என உள்துறை அமைச்சர் அகமட் சாஹிட் ஹமீடி கடுமையாக சாடியுள்ளார்.

“இத்தாலி மற்றும் ஆஸ்திரிய கடப்பிதழை கொடுக்கும் அவர்களின் தோற்றம் ஆசியர்கள் போன்று இருப்பதை குடிநுழைவுத்துறை அதிகாரிகள் கவனிக்கவில்லையா? அது தான் எனக்கு இன்னும் புரியவில்லை” என்று இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் சாஹிட் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகின்றது என்றும் சாஹித் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

மாஸ் ஏர்லயன்ஸ் நிறுவனம் பயணிகளின் பெயர்களை அறிவித்த போது, அதில் இருந்த இத்தாலி நாட்டைச் சேர்ந்த லுய்கி மரால்டி மற்றும் ஆஸ்திரியா நாட்டைச் சேர்ந்த கிறிஸ்டியன் கோஸெல் ஆகிய இருவரின் பெயர்களும் கேள்விக் குறியானது.

காரணம் அவர்கள் இருவரும் அந்த விமானத்தில் பயணம் செய்யவில்லை. மாறாக அவர்களுக்குப் பதிலாக வேறு யாரோ இருவர் பயணித்துள்ளனர் என்று தெரியவந்துள்ளது.