Home கலை உலகம் வடிவேலு படத்துக்கு தடை-சிலர் மிரட்டுவதாக தகவல்!

வடிவேலு படத்துக்கு தடை-சிலர் மிரட்டுவதாக தகவல்!

648
0
SHARE
Ad

10-1394447868-vadivel-actor-12-600சென்னை, மார்ச் 11 – வடிவேலு நடித்துள்ள ஜெகஜ்ஜால புஜபல தெனாலிராமன் படம் வெளியிடக்கூடாது என சிலர் மிரட்டுவதாக தகவல் பரவியுள்ளது. மூன்று ஆண்டு இடைவெளிக்குப் பிறகு வடிவேலு இரண்டு வேடங்களில் நாயகனாக நடிக்கும் படம் ஜெகஜ்ஜால புஜபல தெனாலிராமன். இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிந்து இசை வெளியீட்டு விழாவுக்கு தயாராகி வருகின்றனர்.

ஏப்ரல் 11-ஆம் தேதி படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர்.  ஆனால் இந்தப் படத்துக்கு திரையறங்குகள் தரக்கூடாது என சிலர் இப்போதே மிரட்ட ஆரம்பித்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. விஜயகாந்தை கடுமையாக விமர்சித்துப் பேசினார் வடிவேலு என்பதற்காகத்தான் அவரை வைத்து வேறு யாரும் படம் எடுக்க தயங்கிவந்தனர்.

இந்த நிலையில் ஏஜிஎஸ் நிறுவனம் வடிவேலுவை கதாநாயகனாக வைத்து பிரமாண்ட படம் எடுக்க முன்வந்தது. அப்போதே ஆளும் தரப்பை அணுகிய ஏஜிஎஸ் நிறுவனம், இந்தப் படத்தை எடுப்பதில் அரசுத் தரப்புக்கு ஆட்சேபணைகள் உள்ளதா என்று கேட்டு, அவர்கள் இல்லை என்று சொன்ன பிறகே படப்பிட்ப்பைத் தொடங்கினர்.

#TamilSchoolmychoice

இப்போது திரையறங்குகளில் திரையிடக்கூடாது என பிரச்சனை கிளம்பியிருப்பதால் ஏஜிஎஸ் நிறுவனம்,  முதல்வர் தரப்பை அணுகி, இந்தப் படத்துக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை என்று கூறியபிறகுதான் நாங்கள் படத்தை எடுத்துள்ளோம். தேவையில்லாமல் யாரும் மிரட்ட வேண்டாம்.

நாங்கள் அரசுத் தரப்பை நாடி பாதுகாப்புக் கோர வேண்டி வரும்,” என்று கூறியுள்ளனர். மிரட்டியவர்கள் யார் என்று தங்களுக்குத் தெரியவில்லை என்றும், தெரிந்தால் நிச்சயம் சட்ட நடவடிக்கையில் இறங்குவோம் என்றும் கூறியுள்ளது தயாரிப்பாளர் தரப்பு.