Home வாழ் நலம் விபரீதகரணி ஆசனம்!

விபரீதகரணி ஆசனம்!

3600
0
SHARE
Ad

3ec13d66-0bcd-4e4f-a64b-0ff34fcbdb3d_S_secvpfமார்ச் 11 – விபரீத- என்றால் தலைக்கீழ் என்று பொருள். கரணி என்றால் செயல்பாடு என்று பொருள். நமது உடலை தலைகீழாக புவியீர்ப்பு சக்தியை நோக்கி வைப்பதால் உடல் உறுப்புகள் வலிமை உறுதி பெறுகின்றன. முத்திரை பயிற்சியே ஆசனமாக வருவதால் பலன்கள் அதிகம்.

செய்முறை:

1. விரிப்பின் மீது 3 அல்லது 4 இலவம் பஞ்சு தலையணைகளை அடுக்கி வைக்கவும்.

#TamilSchoolmychoice

2. தலையணையின் மீது மையத்தில் அமராமல் முன் பகுதி நுனிக்கும் மையப்பகுதியின் இடையில் அமரவும்.

3. மெதுவாக பின்னால் வளைந்து கைகளை தரையில் வைத்து ஊன்றிப் படுத்து உச்சந் தலையை விரிப்பின் மீது வைக்கவும்.

4. கால்களை ஒன்று சேர்த்து மேலே உயர்த்தவும், அதே சமயத்தில் தலையை நகர்த்தி தோள்பட்டைகளை விரிப்பதன் மீது வைக்கவும்.

5. சாதாரண மூச்சில் 100 எண்ணிக்கை இருக்கவும், முடிந்ததும் கால்களை கீழே கொண்டு வந்து தரையில் வைக்கவும். சிறிது ஓய்வு எடுக்கவும்.

6. சாதாரண மூச்சில் 100 எண்ணிக்கை இருக்கவும், முடிந்ததும் கால்களை கீழே கொண்டு வந்து தரையில் வைக்கவும். சிறிது ஓய்வு 541d1464-349f-4043-b387-415d049b16e9_S_secvpfஎடுக்கவும்.

7. திரும்பவும் கால்களை உயர்த்தி 100 எண்ணிக்கை செய்யவும். அது போல் 15 தடவை அதாவது 1500 எண்ணிக்கை சராசரி 15 நிமிடங்கள் செய்யலாம்.

8. கால்விரல்களை ஊன்றி குதிகாலை உயர்த்தி திரும்பவும் கால் விரல்களை ஊன்றி முதுகை உயர்த்தவும், அப்போது தலையணைகளை ஒன்றன்பின் ஒன்றாக பக்கவாட்டில் பிடித்து வெளியே எடுத்துப் போட வேண்டும்.

9. மெதுவாக முதுகை விரிப்பின் மீது வைத்து கால்களை நீட்டி சவாசனத்திற்கு வரவும்.
குறிப்புகள்:
1. பகலில் 200 எண்ணிக்கைக்கு மேல் செய்யக் கூடாது. அப்படி செய்வதால் பகலில் தூக்கம் வரும்.

2. இரவில் சாப்பாடு சாப்பிடுவதற்கு முன் வெறும் வயிற்றில் 15 நிமிடங்கள் கழித்து இரவில் சாப்பாடு சாப்பிட்டு விட்டு 1 டம்ளர் சூடாக தண்ணீர் குடித்து விட்டு படுதத்தால் இரவில் அமைதியான ஆழ்ந்த நித்திரை ஏற்படும். ( தூக்க மாத்திரை சாப்பிடுபவர்கள் கவனிக்கவும்.)

3. தலையணையை வைத்து செய்வது தான் பாதுகாப்பானதும், அதிக பலனும் அடைய உதவும்.

images4. பயிற்சி செய்ய நேரம் இல்லாதவர்கள், அடிமுதுகு வலி, கழுத்து வலி, நீரழிவு நோய், ஆஸ்துமா தலைவலி அதிக ரத்த அழுத்தம் உடைய நோயாளிகள். இந்த ஒரு ஆசனத்தை மட்டும் இரவில் செய்து வந்தால் நோய்கள், வலிகள் கட்டுப்பாட்டில் இருக்கும்.

பலன்கள்:
எல்லா நாளமில்லா சுரப்பிகளும் நன்றாக வேலை செய்யும். சிரசாசனம், சர்வாங்காசனம் ஆகிய ஆசனங்களின் பலன்களை கொடுக்கிறது. முதுகு வலி, கழுத்து வலி, தலை வலி, தலை சுற்றல் அஜீரணம் போக்குகிறது. முகத்தில் பொலிவு ஏற்படும்.