Home நாடு 23-ஆம் தேதி பத்து மலையில் அனைத்துலக யோகா கொண்டாட்டம்!

23-ஆம் தேதி பத்து மலையில் அனைத்துலக யோகா கொண்டாட்டம்!

1048
0
SHARE
Ad

கோலாலம்பூர்: 5-வது அனைத்துலக யோக தினத்தை முன்னிட்டு மலேசிய இந்திய உயர் ஆணையம் ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் பல்வேறு இடங்களில் யோகா கொண்டாட்டங்களை ஏற்பாடு செய்துள்ளது.

அவ்வகையில் வருகிற 23-ஆம் தேதி பத்து மலை கோயில் வளாகத்தில் காலை 7 மணிக்குத் தொடங்கி 9 மணிவரையிலும் இந்த யோகா தினம் கொண்டாடப்படவுள்ளது என்று இந்திய உயர் ஆணையம் தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டுகளைப் போல இவ்வாண்டும் இந்திய உயர் ஆணையம் பல்வேறு உள்ளூர் சமூக அமைப்புகளுடன் இணைந்து இந்த கொண்டாட்டங்களை ஏற்பாடு செய்துள்ளது.

#TamilSchoolmychoice

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் இந்திய கலாச்சார மையத்தின் யோகா ஆசிரியர் இந்த பயிற்சியை நடத்துவார் என ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. சுமார் 2,000 மேற்பட்ட மக்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே, 5-வது அனைத்துலக யோகா தினத்தை முன்னிட்டு இந்தியா ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி யோக பயிற்சியில் பங்கேற்றார். அவருடன் இணைந்து சுமார் 30,000 பேர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு யோகா பயிற்சியில் ஈடுபட்டனர்.