Home இந்தியா தமிழகத்தில் தனித்துப் போட்டியிட தைரியமுள்ளது – ப.சிதம்பரம்!

தமிழகத்தில் தனித்துப் போட்டியிட தைரியமுள்ளது – ப.சிதம்பரம்!

693
0
SHARE
Ad

P_Chidambaramசென்னை, மார்ச் 11 – தமிழகத்தில் கூட்டணி அமையாவிட்டால், நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடும் என்று மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், காங்கிரஸ் கட்சி கூட்டணி அமைத்தோ அல்லது தனித்தோ நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும்.

ஒருவேளை கூட்டணி எதுவும் அமையவில்லை என்றாலும், அனைத்து (40 இடங்கள்) தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை நிறுத்துவோம். காங்கிரஸ் கட்சியின் சாதனைகளைச் சொல்லி வாக்கு கேட்போம் என்றார் ப.சிதம்பரம். திமுகவுடன் காங்கிரஸ் கட்சி கூட்டணி அமைக்க முயற்சிகள் மேற்கொண்ட போதிலும்,

கடைசி நேரத்தில் மு.க.ஸ்டாலினின் தலையீடு காரணமாக, அந்த முயற்சிக்கு பலன் கிடைக்கவில்லை 35 தொகுதிகளுக்கும் திமுக நேற்று வேட்பாளர்களை அறிவித்துவிட்டது. இது தொடர்பாக ப.சிதம்பரம் நேற்று வெளியிட்ட அறிக்கையில், “நடைபெறவிருக்கின்ற நாடாளுமன்றத் தேர்தல் பணிக்கு தமிழக காங்கிரஸ் தன்னை தயார்படுத்தி வைத்திருக்கிறது.

#TamilSchoolmychoice

தமிழகமெங்கும் காங்கிரஸ் நண்பர்கள் தேர்தலை எதிர்கொள்ள உற்சாகமாக இருக்கிறார்கள். தேர்தல் பணி குறித்த ஆலோசனை செய்வதற்கு வரும் 14.3.2014 வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு சத்தியமூர்த்தி பவனில் மாநில நிர்வாகிகள், மாவட்டத் தலைவர்கள் கூட்டம் நடைபெறும் என்று கூறியுள்ளார்.