குரோஷியா நாட்டின், ஸ்ப்லிட் நகரத்தில், 200 பேரின் முன்னிலையில், அமண்டாவுக்கும், மணமகன் உடையில் வந்த, ஷீபாவுக்கும் திருமணம் நடந்தது. இதுகுறித்து, அமண்டா கூறியதாவது:, ஷீபாவிடம், நான் காதலை தெரிவித்தேன், வாலாட்டி, என் காதலை, அது ஏற்றுக்கொண்டது.
நான் கவலையாக இருக்கும் போதெல்லாம், ஷீபா, என்னை சிரிக்க வைத்து, எனக்கு ஆறுதல் கூறும். ஒரு கணவருக்கு இருக்க வேண்டிய குணங்களும் அதனிடம் இருக்கிறது. இந்த திருமணம் சட்ட ரீதியாக செல்லாது என்றாலும், ஷீபா எனக்கு முக்கியம் என அமண்டா கூறினார்.