Home உலகம் லஞ்சம் கொடுத்த இந்தியருக்கு ஓமனில் 15 ஆண்டு சிறை!

லஞ்சம் கொடுத்த இந்தியருக்கு ஓமனில் 15 ஆண்டு சிறை!

653
0
SHARE
Ad

khan201302091508128261துபாய், மார்ச் 11 –  ஓமன் நாட்டில், எண்ணெய் நிறுவனத்தின் ஒப்பந்தத்தை பெறுவதற்காக, லஞ்சம் கொடுத்த, இந்தியர்களுக்கு, 15 ஆண்டுகள்  சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. கேரளாவை சேர்ந்தவர்  முகமது அலி என்பவர் ஓமன் நாட்டில், பெரிய கட்டுமான நிறுவனத்தை நடத்தி வருகிறார்.

கல்பார் இன்ஜினியரிங் என்ற பெயரில் செயல்படும்  இந்த நிறுவனம், ஓமன் நாட்டு எண்ணெய் நிறுவனத்தின், ஒப்பந்தத்தை பெறுவதற்காக, கணிசமான லஞ்சம் கொடுத்துள்ளது. லஞ்சம் கொடுத்த, கல்பார்  நிறுவன உரிமையாளர், முகமது அலி, இவரது நிறுவன மேலாளர் ஒருவர், எண்ணெய் நிறுவன அதிகாரிகள், ஐந்து பேர் உள்பட, ஏழு பேர் மீது, வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த, மஸ்கட் நகர நீதிமன்றம், முகமது அலிக்குக்கும், அவரது நிறுவன மேலாளருக்கும், தலா, 15 ஆண்டு சிறை தண்டனையும், 28 கோடி ரூபாய் அபராதமும் விதித்துள்ளது. இவரது நிறுவன மேலாளருக்கு, 8.5 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. தண்டனை காலம் முடிந்ததும், இவர்கள் இருவரும், ஓமன் நாட்டை விட்டு வெளியேற்றப்படவுள்ளனர்.

#TamilSchoolmychoice