Home நாடு MH370: தேடும் முயற்சிகளை அதிகப்படுத்தும்படி மலேசியாவுக்கு சீனா கோரிக்கை!

MH370: தேடும் முயற்சிகளை அதிகப்படுத்தும்படி மலேசியாவுக்கு சீனா கோரிக்கை!

496
0
SHARE
Ad

MAS MH 370 440 x 215மார்ச் 11 – கடந்த சனிக்கிழமை காணாமல் போன MH370 மாஸ் விமானத்தைத் தேடும் பணியில் முயற்சிகளை அதிகப்படுத்துமாறு மலேசியா அரசாங்கத்தை சீனா கேட்டுக் கொண்டுள்ளது.

#TamilSchoolmychoice

தாங்கள் தேடுகின்ற இடங்களின் அளவை விரிவாக்கிக் கொண்டிருக்கின்றோம் என மலேசிய அரசாங்கத் தரப்பில் கூறப்பட்டாலும், சீனாவின் குறைகூறலுக்கு மலேசியா ஆளாகியுள்ளது.

ஏறத்தாழ 9 நாடுகளிலிருந்து கப்பல்களும், விமானங்களும் மலாக்கா நீரிணை முதல் தென் சீனக்கடல் பகுதி வரை 239 பயணிகளுடன் காணாமல் போன விமானத்தைத் தேடுகின்ற பணிகளில் ஈடுபட்டுள்ளன.

சீனாவின் வெளியுறவுத் துறையின் பேச்சாளரான குயின் காங் “மலேசியா தனது தேடுதல் முயற்சிகளை மேலும் அதிகப்படுத்த வேண்டும் என்றும் அதே வேளையில் முழுமையான புலன் விசாரணைகளை உடனடியாகத் தொடங்க வேண்டும் என்றும்  கேட்டுக் கொள்ளும் கடமை எங்களுக்கு உண்டு. தேவைப்படும் தகவல்களை சீனாவுக்கு உடனுக்குடன் தரவும் மலேசியா முன்வர வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

மலேசியா அரசாங்கம் எடுத்து வரும் முயற்சிகள் மீது சீனத் தரப்பினர் நம்பிக்கை இழந்து வருவதாக தகவல் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இருப்பினும் சீனத்தரப்பினருக்கு நம்பிக்கை ஏற்படுத்துவதற்காக, காணாமல் போன விமானத்தின் பயணிகளின் குடும்பத்தினர் விரும்பினால் அவர்களை கோலாலம்பூருக்கு அழைத்துச் சென்று தேடுதல் முயற்சிகளை நேரடியாகக் கண்டு தெரிந்து கொள்ள அவர்களுக்கு வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்க மலேசியா அரசாங்கம் முன்வந்துள்ளது.

காணாமல் போன விமானத்தின் பயணிகளில் ஒருவரது உறவினர் நாங்கள் மலேசியா போனாலும் அங்கேயும் நாங்கள் காத்திருக்கத்தான் போகிறோம். அதற்கு பெய்ஜிங்கிலேயே நாங்கள் காத்திருக்கலாம். எங்களுக்கு அங்கு யாரையும் தெரியாது. ஆங்கிலமும் தெரியாது” என்று தகவல் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.