Home நாடு MH370: சுபாங்கை நோக்கி திரும்பியதா?

MH370: சுபாங்கை நோக்கி திரும்பியதா?

582
0
SHARE
Ad

unnamed (1)கோலாலம்பூர், மார்ச் 11 – மாயமான MH370 விமானத்தை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வரும் வேளையில், அந்த விமானம் சுபாங் விமான நிலையத்தை நோக்கி திரும்பியிருக்கலாம் என்ற கோணத்தில் அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்.

இது குறித்து மலேசிய அதிகாரிகள் வெளியிட்டுள்ள அறிக்கையில், மேற்கே தீபகற்ப மலேசியா கடற்பகுதிகளில் மலாக்கா வரையில் தேடும் திசையை விரிவு படுத்தியுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

“எல்லா கோணங்களிலும் தேடுதல் பணியை செய்து வருகின்றோம். தற்போதைய சூழ்நிலையில் எதையும் முடிவு செய்து விட முடியாது” என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

#TamilSchoolmychoice

ஆஸ்திரேலியா, சீனா, தாய்லாந்து, இந்தோனேசியா, சிங்கப்பூர், வியட்நாம், பிலிப்பைன்ஸ் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளைச் சேர்ந்த மீட்புப் படையில் இந்த தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மொத்தமாக 9 விமானங்கள் மற்றும் 24 கப்பல்கள் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.