Home உலகம் உக்ரைன் விவகாரம் – ரஷியாவுக்கு கண்டனம் தெரிவித்து அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் தீர்மானம்!

உக்ரைன் விவகாரம் – ரஷியாவுக்கு கண்டனம் தெரிவித்து அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் தீர்மானம்!

606
0
SHARE
Ad

US1302201401வாஷிங்டன், மார்ச் 12 – உக்ரைன் நாட்டின் ஒரு பகுதியான கிரீமியா சுயாட்சி பிரதேசத்தை ரஷியா ராணுவம் கைப்பற்றிவிட்டது. அதை தம் நாட்டுடன் இணைக்கும் திட்டத்திலும் தீவிரமாக இறங்கி வருகிறது. அதற்கு அமெரிக்கா உள்பட மேற்கத்திய நாடுகள் கண்டனம் தெரிவிக்கின்றன. இந்த விவகாரத்தில் அமெரிக்கா உதவியை உக்ரைன் இடைக்கால அரசு கேட்டு வருகிறது.

எனவே அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படை தற்போது கிரீமியா பகுதியில் குவிக்கப்பட்டுள்ள ரஷியா ராணுவத்தின் நடமாட்டம் குறித்து தீவிரமாக கண்காணிக்கிறது. போலந்து, ருமேனியா வான்வெளியில் 3 உளவு விமானங்களை அனுப்பி ரஷியா ராணுவத்தை ஆய்வு செய்து வருகிறது.

இந்நிலையில் உக்ரைன் இறையாண்மையை அத்துமீறியதாக ரஷியாவுக்கு கண்டனம் தெரிவித்து அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.  உடனடியாக 1997 ஒப்பந்தத்தின்படி ரஷிய ராணுவம் வெளியேற வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

 

Comments