Home நாடு கடலில் மிதந்த பொருள் கண்டெடுப்பு! MH370 விமானத்தை சேர்ந்ததா?

கடலில் மிதந்த பொருள் கண்டெடுப்பு! MH370 விமானத்தை சேர்ந்ததா?

916
0
SHARE
Ad

Untitledமார்ச் 12 – சீன கடற்பகுதியில் தேடுதல் பணியில் ஈடுபட்டிருந்த கப்பல் ஒன்று, கடலில் மிதந்து கொண்டிருந்த ஆரஞ்சு வண்ணத்திலான பொருளை மீட்டெடுத்துள்ளதாக சீன செய்தி நிறுவனமான  சின்ஹுவா இன்று காலை தகவல் வெளியிட்டுள்ளது.

அப்பொருள் காணாமல் போன மாஸ் MH370 விமானத்தை சேர்ந்ததாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளதாகவும் சின்ஹுவா தெரிவித்துள்ளது.

தேடும் ஈடுபட்டிருந்த சீனக் கப்பலைச் சேர்ந்த பணியாளர்கள் இருவர், நீண்ட குச்சி ஒன்றை வைத்து அப்பொருளை கப்பலுக்கு இழுப்பது போன்ற படம் ஒன்றை சின்ஹுவா இன்று காலை தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

#TamilSchoolmychoice