Home நாடு ‘தினக்குரல்’ பத்திரிக்கையில் செல்லியல் தொழில் நுட்ப செய்திகள் மறு பிரசுரம்

‘தினக்குரல்’ பத்திரிக்கையில் செல்லியல் தொழில் நுட்ப செய்திகள் மறு பிரசுரம்

737
0
SHARE
Ad

Thinakural Apple news 440 x 215மார்ச் 12 – நமது செல்லியலில் சிறப்பு அம்சமாக இடம் பெறுவது நமது தொழில் நுட்ப பிரிவில் இடம் பெறும் செய்திகளாகும். நவீன தொழில் நுட்ப யுகத்தில் குறிப்பாக தொலைத் தொடர்புத் துறையில் தினமும் புதுப் புதுச் செய்திகள் வெளிவருகின்றன. இவற்றை வாசகர்களுக்குப் பயன்படும் வண்ணம் பல்வேறு செய்தித் தளங்களிலிருந்து சேகரித்து அவற்றை செல்லியலில் பிரசுரித்து வருகின்றோம்.

#TamilSchoolmychoice

இந்த செய்திகளை மறுநாள் மலேசியத் தமிழ்ப் பத்திரிக்கைகள் அப்படியே வரிக்கு வரி மறுபிரசுரம் செய்து தங்களின் பத்திரிக்கைகளில் வெளியிடுகின்றன.

நமது இணையத் தளத்தின் மூலமாகவும், செல்லியல் செயலியின் மூலமாக கைத்தொலைபேசிகளிலும் நமது செய்திகளைப் படிக்க முடியாத வாசகர்களுக்கு அச்சுப் பிரசுரங்களின் வழி வெளியாகும் தமிழ்ப் பத்திரிக்கைகளின் வழி நமது செய்திகள்  சென்று சேர்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலே நீங்கள் காண்பது இன்றைய தினக்குரல் பத்திரிக்கையில் வெளியிடப்பட்டிருக்கும் நமது செய்தியாகும்.

நாம் நேற்றைய செல்லியல் பதிப்பில் பிரத்தியேகமாக எழுதி வெளியிட்ட செய்தியை கீழே காணலாம்:

Selliyal Apple news screen shot 440 x 215