Home இந்தியா மோடியை ஹிட்லருடன் ஒப்பிட்ட ராகுல்காந்தியின் பேச்சுக்கு பாஜக கண்டனம்!

மோடியை ஹிட்லருடன் ஒப்பிட்ட ராகுல்காந்தியின் பேச்சுக்கு பாஜக கண்டனம்!

445
0
SHARE
Ad

rahul-and-modiபெங்களூரு, மார்ச் 12 – பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியை சர்வாதிகாரி ஹிட்லருடன் ஒப்பிட்ட ராகுல்காந்தியின் பேச்சுக்கு பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது. குஜராத் மாநிலம் பலாசி நகரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய ராகுல் பிரச்சனைக்கு தீர்வு காண்பதில் காங்கிரஸ்,

காந்திய வழியை பின்பற்றுவதாகவும் ஆனால் ஒரு சில தலைவர்களோ ஹிட்லர் போன்று ஆனவத்துடன் நடந்துகொள்வதாக குற்றம் சாட்டினார். இதற்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. பெங்களூரில் செய்தியாள்களிடம் பேசிய அக்கட்சியின் மூத்த தலைவர் வெங்கய்யநாயுடு தோல்வி பயத்தால் இதுபோன்ற தரம் தாழந்த அரசியலை காங்கிரஸ் மேற்கொள்வதாக தெரிவித்தார்.

காந்தியத்தை பின்பற்றுவதாக கூறும் காங்கிரஸ் சுதந்திரம் அடைந்த பின்னர் கட்சியை கலைத்து விடுமாறு சொன்ன காந்தியின் வார்த்தைகளை கடைபிடிக்காதது ஏன் என்று வினவியுள்ளார். காந்தியின் வார்த்தைகளை பின்பற்றாத காங்கிரஸ், காந்திய வழியில் நடப்பதாக கூறி மக்களை ஏமாற்றி வருவதாகவும் வெங்கய்யநாயுடு தெரிவித்தார்.