புதுடெல்லி, மார்ச் 12 – ஆம் ஆத்மி கட்சி வெளியிட்ட இந்திய வரைப்படத்தில் காஷ்மீர் பகுதிகள் பாகிஸ்தானுக்கு சொந்தமானதாக குறிப்பிடப்பட்டதால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. ஆம் ஆத்மி கட்சியின் இணையதளத்தில் இந்தியாவின் வரைப்படம் வெளியிடப்பட்டது.
அதில் இந்தியாவிற்கு சொந்தமான காஷ்மீர் மாநிலத்தின் சில பகுதிகள் பாகிஸ்தான் ஆட்சி பகுதியாக குறிப்பிடப்பட்டுள்ளது. நிதி திரட்டுவதற்கான ஆம் ஆத்மி இணையதளத்தில் வெளியிடப்பட்ட இந்திய வரைப்படத்தில் இந்த தவறு ஏற்பட்டதாக தெரிகிறது.
இதுபற்றி செய்திகள் வெளியானதும் ஆம் ஆத்மி கட்சி இந்திய வரைப்படம் வெளியான பக்கத்தை நீக்கிவிட்டது. ஆனாலும் டுவிட்டர் இணையதளத்தில் குறிப்பிட்ட அந்த இந்திய வரைப்படம் வலம் வருவதால் ஆம் ஆத்மி கட்சிக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.