Home நாடு முன்னுக்குப் பின் முரணான தகவல்கள்! தேடுதல் பணியை தற்காலிகமாக நிறுத்தியது வியட்நாம்!

முன்னுக்குப் பின் முரணான தகவல்கள்! தேடுதல் பணியை தற்காலிகமாக நிறுத்தியது வியட்நாம்!

517
0
SHARE
Ad

Pham_Quy_Tien1203_840_559_100மார்ச் 12 – காணாமல் போன மாஸ் விமானம் MH370 மலாக்கா நீரிணைக்கு ( Straits of Malacca) மேலே கடைசியாகப் பறந்ததாக கண்டறியப்பட்டுள்ளதை அடுத்து வியட்நாம் தனது தேடுதல் மற்றும் மீட்பு பணிகளை தற்காலிகமாக இன்று முதல் நிறுத்தியுள்ளது.

வியட்நாம் நாட்டின் துணை போக்குவரத்து அமைச்சர் பாம் கூய் தியூ இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், மலேசிய அதிகாரிகள் வியட்நாம் அதிகாரிகளுக்கு சரியான தகவல்களைத் தருவதில்லை என்று புகார் தெரிவித்துள்ளார்.

மேலும், தங்களது மீட்பு குழுவினரை தற்காலிகமாக நிறுத்தி வைத்தாலும், சில விமானங்களை அனுப்பிக் கொண்டு தான் இருக்கின்றோம் என்றும் பாம் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.

#TamilSchoolmychoice

ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்திகளின் அடிப்படையில் இரண்டு தகவல்கள் குறித்து விளக்கமளிக்க வேண்டும் என மலேசியாவிற்கு வேண்டுகோள் விடுத்துள்ளோம் என்றும் பாம் குறிப்பிட்டுள்ளார்.

விமானம் கடைசியாக மலாக்கா நீரிணைக்கு மேலே பறந்ததை மலேசிய விமானப்படை(RMAF) கண்டறிந்துள்ளதாக நேற்று இராணுவ அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது. ஆனால் மலேசிய விமானப்படை தலைவர் டான்ஸ்ரீ ரோட்ஸாலி தாவுத் அதை மறுத்துவிட்டார்.

ஆனால், விமானம் ரேடார் கண்காணிப்பில் இருந்து தொலைவதற்கு முன் திரும்ப முயற்சி செய்துள்ளது என்பதை மட்டும் ரோட்ஸாலி தொடர்ந்து கூறிவருகின்றார்.

அப்படியானால், அந்தமான் கடற்பகுதி, மலாக்கா நீரிணை என தேடுதல் பகுதிகளை மலேசியா விரிவு படுத்தியுள்ளது ஏன் என்ற கேள்வியும், குழப்பமும் நிலவி வருகின்றது.

விமானம் மாயமாகி 4 நாட்களுக்கும் மேல் ஆகியும் எந்த தடையமும் கிடைக்காததால், நிலைமை மோசமாக இருக்குமோ என்று தான் அஞ்சுவதாகவும் பாம் நேற்று செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.