Home நிகழ்வுகள் மலேசிய சைவ நற்பணிக் கழகத் தமிழர் திருநாள்

மலேசிய சைவ நற்பணிக் கழகத் தமிழர் திருநாள்

836
0
SHARE
Ad

tharmalingam-2கோலாலம்பூர், பிப்.14- மலேசிய சைவ நற்பணிக் கழகத்தின் ஏற்பாட்டில் எதிர் வரும் 17.2.2013 ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி முதல் மாலை 5.30 மணி வரை தலைநகர்  விஸ்மா துன் சம்பந்தன், கே.ஆர். சோமா அரங்கில் தமிழர் திருநாள், தமிழ் புத்தாண்டு பெருவிழா நடைபெறவுள்ளது.

இந்நிகழ்ச்சிக்கு கூட்டரசுப் பிரதேச நல்வாழ்வுத் துறை துணை அமைச்சர் டத்தோ மு.சரவணன் சிறப்பு வருகை புரிவார்.

மேலும். தமிழரின் மாண்பு எனும் தலைப்பில் மலேசிய தமிழியல் ஆய்வுக்களத்தின் தலைவர், தமிழறிஞர் இர.திருசெவனாரும் தமிழ்ச் சமயமும் வாழ்வியலும்  என்ற தலைப்பில் மலேசிய சைவ நற்பணிக் கழகத்தின் தலைவர் திருமுறைச் செம்மல் ந.தர்மலிங்கமும் உரையாற்றுவார்.

#TamilSchoolmychoice

தொடர்ந்து, மலேசியத் தமிழ் சங்கத்தின்  தலைவர் கவிஞர் காரைக்கிழாரின் கவிதை படைப்பும் தமிழிசையும்  திருக்குறள் படைப்பும் தமிழ்ச் சான்றோர் அறிமுகப் படைப்பும்  கிள்ளான் ரெங்கநாதர் நடனப் பள்ளியின் பாரதியார் நடனங்களும் இந்நிகழ்ச்சிக்கு மெருகூட்டவுள்ளன.

எனவே, தமிழர்களிடையே தமிழுணர்வு மேலோங்கவும் தமிழர் இனமாண்பு உணர்வு பெருகவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்நிகழ்ச்சியில் தமிழ் ஆர்வலர்களும்  தமிழ்ப் பற்றாளர்களும் மற்றும் பொது மக்களும் கலந்து கொண்டு பயன் பெறுமாறு அழைக்கப்படுகின்றனர்.

மேல் விவரங்களுக்கு, 014-2279728, 017-3130311

Comments