Home இந்தியா காங்கிரஸ், பாஜக,விடமிருந்து நாட்டை காப்பாற்ற வேண்டும் – மம்தா பானர்ஜி!

காங்கிரஸ், பாஜக,விடமிருந்து நாட்டை காப்பாற்ற வேண்டும் – மம்தா பானர்ஜி!

500
0
SHARE
Ad

50fbee11-509c-4f55-80f4-2b5c345a211b_S_secvpfபுதுடெல்லி, மார்ச் 13 – அன்னா ஹசாரே வருகிற நாடாளுமன்ற தேர்தலில் மேற்கு வங்க முதல்வரான மம்தா பானர்ஜிக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளேன் என ஏற்கனவே அறிவித்திருந்தார். இதனை அடுத்து டெல்லி ராம்லீலா மைதானத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பிரச்சார கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

ஆனால் அன்னா ஹசாரேவுக்கு  உடல் நிலை சரியில்லை எனவே அவர் கலந்து கொள்ளமாட்டார் என்று அவரது ஆதரவாளர் சுனிதா கோத்ரா தெரிவித்தார். இந்நிலையில் டெல்லி வந்த மம்தா பானர்ஜி ராம்லீலாவில் தொண்டர்கள் மத்தியில் பேசினார். திரிணாமுல் காங்கிரஸ் கூட்டத்தில் தொண்டர்கள் இல்லாத நிலையை காண முடிந்தது.

கூட்டத்தில் பேசிய திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், மேற்குவங்க மாநில முதல்வருமான மம்தா பானர்ஜி, நாங்கள் எங்களது கூட்டத்தை காட்ட இங்கு பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யவில்லை. உத்தரபிரதேசம், குஜராத், ராஜஸ்தான், பஞ்சாப் என அனைத்து மாநிலங்களிலும் பேரணி நடத்துவோம். மக்களுக்காக திரிணாமுல் காங்கிரஸ் செயல்படும்.

#TamilSchoolmychoice

காங்கிரஸ் மற்றும் பாரதீய ஜனதா ஊழல் நிறைந்த கட்சிகள். அவர்களால் நாட்டில் ஆட்சி செய்ய முடியாது. தெலுங்கானா மாசோதாவை பாரதீய ஜனதா மற்றும் காங்கிரஸ் தாக்கல் செய்தது. ஆனால் திருத்தம் கொண்டுவரப்படவில்லை. நாம் காங்கிரஸ் மற்றும் பாரதீய ஜனதா கட்சியிடம் இருந்து நாட்டை காக்க வேண்டும்.

தேர்தலுக்காக பாரதீய ஜனதா மற்றும் காங்கிரஸ் கட்சிகள் கோடிக்காணக்கண பணத்தை செலவு செய்கிறது. நாங்கள் பொய் வாக்குறுதிகளைக் கொடுக்க மாட்டோம். நாட்டிற்காக பாடுபடுவோம். தேர்தலை அடுத்தும் பாரதீய ஜனதா மற்றும் காங்கிரஸ் கட்சிக்கு திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு கொடுக்காது என்று கூறினார்.