Home இந்தியா தேவயானி மீதான விசா மோசடி வழக்கை அமெரிக்க நீதிமன்றம் ரத்து செய்தது!

தேவயானி மீதான விசா மோசடி வழக்கை அமெரிக்க நீதிமன்றம் ரத்து செய்தது!

532
0
SHARE
Ad

24-devyani-khobragade-600நியூயார்க், மார்ச் 13 – முன்னாள் இந்திய துணை தூதர் தேவயானி மீதான விசா மோசடி வழக்கை அமெரிக்க நீதிமன்றம் ரத்து செய்துவிட்டது. நியூயார்க்கில் இந்திய துணை தூதர் தேவயானி மீது வீட்டு பணியாளருக்கு விசா வாங்கியதில் மோசடி செய்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட அவர், அவமதிக்கப்பட்டதாக புகார் கூறப்பட்டது.

பின்னர் பிணையில் வெளியான அவர் ஐ.நா. பிரதிநிதி குழுவிற்கு மாற்றப்பட்டார். இந்த நியமனத்தில் இழுபறி ஏற்பட்ட நிலையில் இந்தியாவிற்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டு தேவயானி தாயகம் திரும்பினார். எனினும் அவர் மீதான வழக்கு தொடர்ந்து நடைபெறும் என அமெரிக்கா கூறியது.

இந்நிலையில் இந்த வழக்கு நியூயார்க் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும் போது தேவயானிக்கு தூதரக அந்தஸ்ம், அளவிலான சட்ட பாதுகாப்பு இருந்தது என நீதிபதியே கூறினார். எனவே தேவயானி மீதான வழக்கை தள்ளுபடி செய்வதாக நீதிபதி அறிவித்தார். இதனையடுத்து நீண்ட நாட்களாக நீடித்த சர்ச்சை முடிவுக்கு வந்துள்ளது.