Home நாடு இன்றைய தினக்குரலில் ‘செல்லியல்’ செய்திகள்!

இன்றைய தினக்குரலில் ‘செல்லியல்’ செய்திகள்!

1333
0
SHARE
Ad

unnamed (5)கோலாலம்பூர், மார்ச் 13 – இன்றைய செய்திகளை உடனுக்குடன் இணையத்தளத்திலும், செல்பேசி செயலி வழியாகவும் தமிழில் வழங்கி வரும் முதன்மை மலேசியத் தமிழ் செய்தித்தளம் ‘செல்லியல்’ என்பது அனைவரும் அறிந்த ஒன்று.

இதன் மூலம் உலகெங்கும் உள்ள செல்லியலின் வாசகர்கள் உடனுக்குடன், செல்லியல் செய்திகளை இணையத் மூலமாகவும், ஃபேஸ் புக் என்ற முகநூல் பக்கங்களின் வாயிலாகவும், ஐபோன்கள் மற்றும் அண்ட்ரோய்ட் இயங்குதளத்தைக் கொண்ட கைத்தொலைபேசிகளில், தட்டைக் கணினிகளில் (ஐபேட்) செல்லியல் செயலி வாயிலாகவும் படித்து வருகின்றனர்.

இந்நிலையில் இன்று பதிவிடப்படும் செல்லியலின் செய்திகளை மலேசிய தமிழ் பத்திரிக்கைகளில் சில மறுநாள் வரிவரிக்கு வரி அப்படியே எடுத்து தங்களின் பிரதிகளில் மறுபிரசுரம் செய்கின்றன.

#TamilSchoolmychoice

இன்றைய ‘தினக்குரல்’ நாளிதழில், முதல் பக்கத்தில் செல்லியலின் பிரத்யேக செய்திகள் இரண்டும், அதனையடுத்த பக்கங்களில் செல்லியலில் நேற்று வெளியிடப்பட்ட MH370 பற்றிய 4 செய்திகளும் அப்படியே மறுபிரசுரம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

thinakural