Home கலை உலகம் ரசிகர்களிடம் சிக்கிய ப்ரியா ஆனந்த்!

ரசிகர்களிடம் சிக்கிய ப்ரியா ஆனந்த்!

883
0
SHARE
Ad

Priya-Anand (1)மயிலாடுதுறை, மார்ச் 13 – மயிலாடுதுறையில் படப்பிடிப்புக்காக வந்த நடிகை ப்ரியா ஆனந்த் ரசிகர்கள் கூட்டத்தில் சிக்கித் திணறினார். ஒரு ஊர்ல ரெண்டு ராஜா படப்பிடிப்பு மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் விசேஷ அனுமதி பெற்று நடைபெற்றது. அது ஒரு பாடல காட்சி.

விமல், சூரி, பிரியா ஆனந்த் மூவரும் நடித்தனர். படப்பிடிப்பை காண ஏராளமான ரசிகர்கள் திரண்டனர். ரயில் நிலையம் ரசிகர்கள் கூட்டத்தில் நிரம்பி வழிந்தது. பக்கத்து ஊர்களில் இருந்தெல்லாம் ரசிகர்கள் வந்திருந்தார்கள். சுமார் ஒரு லட்சம் பேர் கூடிவிட்டார்கள்.

படப்பிடிப்பைத் தொடர முடியாத அளவுக்கு ரசிகர்கள் பெரும் கூச்சல் எழுப்பியபடி இருந்தனர். ப்ரியா ஆனந்த், சூரி ஆகியோரை கிண்டல் கேலி செய்தபடி இருந்தனர்.

#TamilSchoolmychoice

உடனே ப்ரியா ஆனந்த் தனது காருக்கு செல்ல முயன்றார். அப்போது ரசிகர்கள் ப்ரியா ஆனந்தை மறித்து  கையெலுத்துக் கேட்டனர். சிலர் சேர்ந்து நின்று புகைப்படம் எடுத்துக்கொள்ள முயற்சித்தனர். இன்னும் சிலர் அத்து மீறி கையை பிடித்து இழுத்து ரகளை செய்தார்கள்.

ப்ரியா ஆனந்த் கூட்டத்தில் சிக்கி தவித்தார். பாதுகாவலர்கள் சிரமப்பட்டு ரசிகர்கள் பிடியில் இருந்து ப்ரியா ஆனந்தை மீட்டு காருக்குள் அனுப்பி வைத்தனர். மறக்க முடியாக பயங்கர அனுபவம் இது, என்றார் பிரியா ஆனந்த்.