Home கலை உலகம் இசையமைப்பாளர் இமானின் கன்னத்தை பிடித்து கிள்ளிய ப்ரியா ஆனந்த்!

இசையமைப்பாளர் இமானின் கன்னத்தை பிடித்து கிள்ளிய ப்ரியா ஆனந்த்!

656
0
SHARE
Ad

oruoorla_renduraja_al022சென்னை, ஆகஸ்ட் 28 – ‘ஒரு ஊர்ல ரெண்டு ராஜா’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ப்ரியா ஆனந்த் இசையமைப்பாளர் இமானை ‘புஜ்ஜிக்குட்டி’ என்று கூறி கன்னத்தை பிடித்து கிள்ளயது தான் கோலிவுட்டில் தற்போதைய பேச்சாகக் இருகிறது.

கண்ணன் இயக்கத்தில் விமல், ப்ரியா ஆனந்த், சூரி, விசாகா சிங் நடித்து வரும் படம் ‘ஒரு ஊர்ல ரெண்டு ராஜா’. இந்த படத்தை மைக்கேல் ராயப்பன் தயாரிக்கிறார். படத்திற்கு இமான் இசைப் பணியை கவனித்துள்ளார்.

oruoorla_rendurajaஇந்நிலையில் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள சத்யம் சினிமாஸில் நேற்று நடைபெற்றது. இசை வெளியீட்டு விழாவில் சிவகார்த்திகேயன், இயக்குனர் விக்ரமன், கௌதம் கார்த்திக், விஜய் சேதுபதி, ஶ்ரீகாந்த், விஷ்ணு, இனியா, சுசீந்திரன், எஸ்.ஆர்.பிரபாகரன், மனோபாலா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

#TamilSchoolmychoice

oruoorla_renduraja_al026நேற்று சூரிக்கு பிறந்தநாள். அதனால் இசை வெளியீட்டு விழாவுக்கு வந்தவர்கள் அனைவரும் சூரிக்கு வாழ்த்து தெரிவித்தனர். மேடையில் பேசிய சூரி கூறுகையில், ‘என்னை மக்களுக்கு அடையாளம் காட்டிய படம் சுசீந்திரன் இயக்கிய வெண்ணிலா கபடிக்குழு.

அந்த படம் வெளியான தேதி தான் எனக்கு பிறந்தநாள் என்றார். படத்தின் நாயகி ப்ரியா ஆனந்த் மேடையில் பேசினார். அப்போது அவர், எனக்கு இசையமைப்பாளர் இமானை மிகவும் பிடிக்கும்.

oruoorla_renduraja_al019அவரது கன்னத்தை பிடித்து இழுக்க வேண்டும் என்ற ஆசை உள்ளது என்றார். ப்ரியா ஆனந்த் பேசியதோடு மட்டுமல்லாமல் இமான் அருகே சென்று செல்லக்குட்டி, புஜ்ஜிக்குட்டி என்று கூறி அவரது கன்னத்தை பிடித்து இழுத்துக் கொஞ்சினார். ப்ரியா இமானின் கன்னத்தை பிடித்து இழுத்தவுடன் அங்கிருந்தவர்கள் ஒரு நிமிடம் அதிர்ச்சி அடைந்தனர்.